Meiyazhagan: என்னோட வேர்கள் கோவையில்தான் இருக்கு.. சொந்த பந்தங்கள் குறித்து கார்த்தி நெகிழ்ச்சி
சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன் (Meiyazhagan Audio Launch). இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இந்நிலையில் கங்குவா இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய, கார்த்தி, இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக, ரெட் கார்பெட்டில் கோவையில் இசை வெளியீட்டு விழா எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து பேசினார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், மெய்யழகன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்ட, இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா, கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில், யாரோ இவன் யாரோ மற்றும் நான் போகின்றேன் எனத் துவங்கும் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற படங்களுக்கு ஏற்படுத்தும் பில்டப்களை இந்தப் படத்திற்கு கார்த்தி மற்றும் 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் ஏற்படுத்தவில்லை. பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மெய்யழகன் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகின்றது.

வேர்கள்: இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கார்த்தி ரெட் கார்பெட்டில் பேசுகையில், கோவையில் ஏன் இசை வெளியீட்டு விழா வைக்கப்படுகின்றது என்பது குறித்து மிகவும் நெகிழ்ச்சிகரமாக பேசினார். அவர் பேசும்போது, " எனது கல்யாணத்துக்கு அப்பறம் கோயம்புத்தூரில் நடக்கும் பெரிய விழா இதுதான்னு நினைக்கிறேன். மெய்யழகன் படம், எனக்கும் இந்த ஊருக்கும் என்னமாதிரியான உறவு இருக்கோ அதைப் பற்றி பேசக்கூடிய படம்தான். அதனால் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும். அர்த்தமுள்ளதாக இருக்கும் என நினைத்து இங்கு இசை வெளியீட்டு விழா வைத்துள்ளோம். எப்படி, நாம் நமது வேர்கள், சுற்றம், உறவுகள்னு சொல்றோம் இல்லையா, எங்களுக்கு இங்கதான் அந்த வேர்கள் இருக்கு.
அழகியல்: அந்த வகையில், இந்தப் படமும் அதேபேசுவதால் இங்குவந்து விழா நடத்தனும்னு எங்களுக்கு ஆசை. 96 படத்திற்குப் பின்னர், கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு அப்பறமா பிரேம் பண்ற படம் இதுதான். ஒரு நல்ல கதையோட வந்தாரு. இந்தப் படத்தை எடுத்துவிடவேண்டும் என்ற தீர்மானத்தோடு செய்தோம். படத்தில் எல்லாம் நன்றாக அமைந்து, படமும் திருப்திகரமான படமாக வந்துள்ளது. படத்தில் அரவிந்த் சுவாமி சாருடன் நடிக்கும்போது அழகியலாக இருந்தது. படம் முழுவதும் நாங்கள் இருவர் இருப்பதால் படம் சிறப்பாக வந்துள்ளது" என பேசினார்.

கங்குவா: அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, "கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டார்க்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும்" என பேசினார். இதன் மூலம் கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் இருந்து தள்ளிப்போகின்றது என்பது தெளிவாகின்றது.


Click it and Unblock the Notifications











