Meiyazhagan X Review: கார்த்தி, அரவிந்த் சாமியின் நடிப்பு அபாரம்.. மெய்யழகன் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை (செப்டம்பர் 27) திரைக்கு வருகிறது. படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று இரவு திரையிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பலரும் மெய்யழகன் படத்தை மெய்யாக பாராட்டி வருகின்றனர்.

ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் இசையமைத்து இருக்கிறார். கார்த்தி, அரவிந்த் சாமியை அடுத்து படத்துக்கு பெரிய பலம் என்றால் அவருடைய இசை தான் என பலரும் மெய் சிலிர்த்து வருகின்றனர்.

meiyazhagan review karthi

சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் லப்பர் பந்து படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை முன்னதாகவே கொடுத்தது போல தற்போது மெய்யழகன் படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுக்கியுள்ளனர். அவற்றை இங்கே காணலாம் வாங்க..

மெய்யழகன் விமர்சனம்: உங்களுடைய வேர்களை தேடி உங்களை பயணம் செய்ய வைக்கும் படமாக இந்த மெய்யழகன் இருக்கும். தூரத்து சொந்தங்கள் என ஒதுக்கி வைக்கும் சொந்தங்களையும் ஒருகணம் நினைத்துப் பார்க்க வைத்து விடும். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு அபாரம். கிராமத்து இளைஞனாக சூது வாது தெரியாமல் பாசத்தைக் கொட்டும் மனிதனாக கார்த்தி மெய்யழகனாக காட்சி தருகிறார். 5க்கு 4.5 மார்க் கொடுக்கலாம் என ரமேஷ் பாலா இந்த படத்துக்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

meiyazhagan review karthi

மணிரத்னத்தை மிஞ்சிட்டாரு: அரவிந்த் சாமிக்கு பக்காவான கதாபாத்திரத்தை கொடுத்தது இதுவரை மணிரத்னம் தான் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதை மிஞ்சிவிட்டார் இயக்குநர் பிரேம்குமார். அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று மனுஷன் புகுந்து விளையாடி உள்ளார். பாசப் போராட்டம் நிறைந்த கதையில் பல சமூக கருத்துக்களையும் அழகாக உட்பொருத்தி இப்படியொரு படத்தை பிரேம்குமார் கொடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என ராஜசேகர் பாராட்டியுள்ளார். இந்த காலத்து அன்பே சிவம் என்றும் கூறியுள்ளார்.

meiyazhagan review karthi

பேரழகன்: மெய்யழகன் - மெய்யாய் பேரழகன் என பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நச்சென விமர்சனம் கொடுத்துள்ளார். அதற்கு முன்னதாக முதல் பாதியை பார்த்து விட்டு ரொம்பவே சிம்பிளான கதை என அவர் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

meiyazhagan review karthi

போர் அடிக்குதா?: கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவர் மட்டுமே படம் முழுக்க நிறைந்திருக்கும் நிலையில், சில இடங்களில் லேக் அடிப்பதாகவும் சில பத்திரிகையாளர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல படமாக மெய்யழகன் இருக்கும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. நாளை பொதுமக்கள் படத்தை பார்த்து கொண்டாடுவதில் தான் வெற்றி மற்றும் தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X