கண்டிப்பாக பிழையில்லை... நிரூபித்த விஜய் சேதுபதி -நயன் ரொமாண்டிக் பாடல்
சென்னை : காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடிக்க விரைவில் வெளியாகவுள்ளது.
படத்தில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் படத்தின் நான் பிழை... நீ மழலை பாடல் வெளியாகியுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இசை
அனிருத் இசையில் படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் டூ டூ டூ பாடல் 30 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் நான் பிழை... நீ மழலை பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான பிரமோஷன்
படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படம் குறித்த பேட்டிகள், அறிவிப்புகள் போஸ்டர்கள் என படம் மிகச்சிறப்பான பிரமோஷனை பெற்று வருகிறது. ரவுடி பிக்சர்ஸ் தன்னுடைய படங்களுக்கு எப்போதுமே சிறப்பாக பிரமோஷனை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான் பிழை... நீ மழலை...
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் மெலடி பாடலான நான் பிழை... நீ மழலை பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் அழகான வரிகளுடன் சிறப்பான இசையுடன் அமைந்துள்ளது.

5 மில்லியன் பார்வைகள்
மேலும் பாடலில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இடையிலான அழகான காதல் இந்தப் பாடலில் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது 5 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
Recommended Video

சிறப்பான மெலடி
சிறப்பான மெலடியாக இந்தப் பாடலை அனிருத் அமைத்துள்ளார். முன்னதாக வெளியான டூ டூ பாடல் குத்து நம்பராக வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பாடல் தற்போது மனதை வருடும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications