இமைக்காக நொடிகள் படத்தை கலாய்த்து மீம்ஸ் போட முடியாது: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்!

இமைக்காக நொடிகள் படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

இமைக்கா நொடிகள் படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது...ஏன் தெரியுமா?- வீடியோ

சென்னை: இமைக்காக நொடிகள் படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ராஷி கன்னா, தேவன், ரமேஷ் திலக், பேபி மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

Meme creators cant troll Imaikka nodigal, says writer Pattukottai Prabhakar

இப்படத்திற்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

இமைக்காக நொடிகள் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர், இந்த படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இந்த படம் ஒரு திரில்லர் படம். இதற்கு திரைக்கதை அமைப்பது மிகவும் சவாலானது. ஆனால் திரில்லர் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதை விரும்பி செய்துள்ளேன். இயக்குனர் அஜய் ஞானமுத்து சிறப்பான திரைக்கதை அமைக்கவும், வசனம் எழுதவும் பெரும்பாடுபட்டிருக்கிறார்.

முன்பு எல்லாம் விமர்சகர்கள் தனியாகவும், ரசிகர்கள் தனியாகவும் இருப்பார்கள். ஆனால் இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால், ரசிகர்களும் விமர்சகர்களாக மாறிவிட்டனர்.

படம் பார்த்துவிட்டு, தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுகின்றனர். அது தவறில்லை என்றாலும், ஒரு முழுமையான விமர்சனமாக இல்லாமல் அது இருக்கிறுது. இந்த படம் அதுபோன்று எழுதுபவர்களையும் நிச்சயம் திருப்திப்படுத்தும்.

எனவே இந்த படத்தை கிண்டல் செய்து, விமர்சிக்கவோ, மீம்ஸ் போடவோ முடியாது", இவ்வாறு அவர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X