ஒவ்வொரு பூக்களுமே பாடல்.. வடிவேலு வெர்ஷன் பார்த்து இருக்கீங்களா.. சேரன் சார் இது என்னனு கொஞ்சம் பாருங்க!

சென்னை: நெட்டிசன்கள் எப்போதுமே கொஞ்சம் விவகாரமான ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். அதுவும் இந்த மீம் கிரியேட்டர்களிடம் எதாவது ஒரு விஷயம் சிக்கிவிட்டால், சின்னா பின்னமாக மாற்றிவிடுவார்கள். அப்படியான தமிழ் மீம் கிரியேட்டர்களின் கடவுளாக இருப்பவர் என்றால் அது நகைச்சுவை நடிகர் வடிவேலுதான். நடிகர் வடிவேலுவின் பல காமெடிகளை வைத்து பல சோகமான பாடல்களைக் கூட நகைச்சுவையாக மாற்றி வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சேரன், இயக்கி நடித்த படமான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்ற பாடலான ஒவ்வொரு பூக்களுமே பாடலை மீம் கிரியேட்டர்கள் வடிவேலு வெர்ஷனில் உருவாக்கி உள்ளார்கள். அது இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மீம்ஸ் உருவாக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, தமிழ் மீம் கிரியேட்டர்கள் தங்கள் நகைச்சுவையான மற்றும் சிந்தனையைத் தூண்டும் மீம்ஸ்களால் இணையத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில், தமிழ் மீம் கிரியேட்டர்கள் சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர். அவர்கள் அரசியல், சினிமா, சமூகம் மற்றும் அன்றாட வாழ்க்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் மீம்ஸ்களை உருவாக்கி, அதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

பல தமிழ் மீம் கிரியேட்டர்கள் தங்கள் தனித்துவமான பாணி மற்றும் நகைச்சுவை உணர்வால் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களாக உள்ளனர். அவர்கள் உருவாக்கும் மீம்ஸ்கள் மில்லியன் கணக்கானோரால் பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. மீம்ஸ்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தபவைகளில் முக்கியமான அம்சமாக உள்ளது. தமிழ் மீம் கிரியேட்டர்கள் பல சமூகப் பிரச்சினைகள் குறித்து மீம்ஸ்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நல்லதும் கெட்டதும்: மீம் கிரியேட்டர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். காப்புரிமை மீறல், தவறான செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெறுப்புப் பேச்சு போன்ற பிரச்னைகள் இதில் அடங்கும். இருப்பினும், அவர்கள் இந்த சவால்களைச் சமாளித்து தொடர்ந்து தங்கள் படைப்புகளை வழங்கி வருகின்றனர். சில மோசமான மீம் கிரியேட்டர்களும் உள்ளார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

வடிவேலு வெர்ஷன்: ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மீம் கிரியேட்டர்களுக்கு கடவுள் போல இருப்பவர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலுதான். ஏதாவது ஒரு விஷயத்தை மீம் மூலம் கலாய்க்க வேண்டும் என்றால் பல மீம் கிரியேட்டர்கள் மனதில் உடனே உதிக்கும் விஷயம், வடிவேலுவின் டெம்ப்ளேட் எது பொருந்திப் போகும் என்பதுதான்.

Meme Creators Create Vadivelu Version Ovvoru Pookalume Song From Cheran Autograph Movie
Photo Credit:

இயக்குநர் சேரன்: அந்த வகையில் இயக்குநர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பூக்களுமே பாடலை வடிவேலு வெர்ஷனுக்கு மாற்றி அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்கள். அது ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சில இணையவாசிகள், டைரக்டர் கண்ணுல படாம பார்த்துக்கோங்க, ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க, நல்ல எடிட்டிங் என்று எல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ எல்லா பாடல்களுக்கும் பொருந்தமானவர் வடிவேலு எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X