வைரலாகும் சூர்யா மீம்ஸ்.. இன்னைக்கு இதுதான் டிரெண்டிங்.. கில்லி படத்தையும் அப்பவே கணிச்சிட்டார்!

சென்னை: கொரோனா வைரஸ், வெட்டுகிளிகள் படையெடுப்பு என நாட்டை உலுக்கிய பிரச்சனைகளை சூர்யா முன்பாகவே கணித்து தனது படங்களில் அது குறித்த காட்சிகளை வைத்துள்ளார் என பல்வேறு மீம்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், சூர்யாவின் படங்களில் மட்டுமல்ல பாடல்களிலும், தொலை நோக்கு பார்வை, ஞான திருஷ்டி, டைம் மெஷின் கான்செப்ட் என பல மேஜிக்குகள் இருக்கிறது என நடிகர் சூர்யாவின் படங்களுடன் பல விஷயங்களை மேட்ச் செய்து நெட்டிசன்கள் செம ஓட்டு ஓட்டி வருகின்றனர்.

நாஸ்ட்ராடாமஸ் என்றும், உண்மையிலேயே சூர்யாவின் கையில் '24' படத்தில் வருவது போல காலக் கணினி வாட்ச் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

நான் தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து

நான் தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து

7 ஆம் அறிவு, காப்பான் மீம்களை ஏற்கனவே எக்கச்சக்கமாக பார்த்துள்ள நிலையில் நேரடியாக இன்றைய ஹாட் டிரெண்டிங்காக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தை சூர்யா எப்போது கணித்தார் என்ற மீமை பற்றி பார்ப்போம். பெரியண்ணா படத்தில் வரும் சூர்யாவின் "நான் தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து தனலட்சுமி விரும்பிச்சு" என்ற பாடல் வரிகளையும் கில்லி படத்தில் விஜய் தம்மடிக்கிற ஸ்டைலை பார்த்து தனலட்சுமியாக நடித்த திரிஷா லவ் பண்ணுவதையும் கோர்த்து வைரலாக்கி வருகின்றனர். சூர்யாவுக்காக அந்த பாடலை பாடியதே விஜய் என்பது கூடுதல் தகவல்.

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா வைரஸை மட்டுமின்றி லாக்டவுனையும் நடிகர் சூர்யா ‘24' படத்திலேயே கணித்துள்ளார் என சூர்யாவுக்கு சத்யன் கொடுக்கும் 144 நம்பர் டோக்கன் காட்சியை பதிவிட்டு, தற்போது உலகமே 144 போட்டது போன்று லாக்டவுனில் முடங்கிக் கிடக்கிறது என்றும் வைரலாக்கி வருகின்றனர்.

நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம்

படங்களில் மட்டுமல்ல சூர்யா நடித்த பாடல்கள் கூட எதிர்காலத்தை கணிக்கும் மாயக் கண்ணாடியாக இருக்கிறது என்பதை பல பாடல் வரிகளை தற்போது நடக்கும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்" பாடலை போட்டு, தற்போது லாக்டவுனில் நியூயார்க் நகரம் உண்மையிலேயே உறங்குகிறது என லந்து செய்கின்றனர்.

90ஸ் கிட்ஸ் கோரிக்கை

90ஸ் கிட்ஸ் கோரிக்கை

இப்போ நீங்க என்ன பண்றீங்கனா... நேரா போயிட்டு 90ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் ஆகுற மாதிரி ஒரு லவ் படம் பண்ணுங்க, என 90ஸ் கிட்ஸ் கோரிக்கை வைப்பது போன்றும், அதற்கு, இதுதான் சார் நம்ம பய புத்தி என பிதாமகன் படத்தில் வரும் வசனத்தை வைத்து சூர்யா பதில் சொல்வது போல மீம் போட்டு அசத்தி வருகின்றனர்.

ஹல்குக்கே ஆக்டிங் குரு

ஹல்குக்கே ஆக்டிங் குரு

தமிழ் படங்களில் மட்டுமின்றி மார்வெல் படமான அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் ஹல்க் கத்துவது போன்று கொடுக்கும் எக்ஸ்பிரஷனும் சூர்யா அப்பவே பண்ணிட்டாருடா, ஹல்குக்கே இவர் தான் ஆக்டிங் குரு என மரண பங்கமாக மீம்களை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர். சூர்யாவை பாராட்டுகின்றனரா சந்தடி சாக்கில் ஓட்டுகின்றனரா என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X