கங்குவா சூர்யாவுக்காக களமிறங்கிய ஜோதிகா.. மீம்ஸ்களில் தெறிக்கவிடும் இணையவாசிகள்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் படத்தின் இசை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். படம் குறித்து நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது கருத்தினைத் தெரிவித்தார். அதற்கு பல இணையவாசிகள் மீம்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா - தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுத்து நேற்று திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை அளிக்க, படக்குழுவினருக்கு கொஞ்சம் அப்செட் ஏற்பட்டது எனலாம்.

jyothika suriya kanguva

படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். சூர்யாவில் இருந்து படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் எதற்கு எடுத்தாலும் கத்திக்கொண்டுதான் இருந்தார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் படக்குழு தரப்பில் இருந்து தியேட்டர்களுக்கு ஒலி அளவினை இரண்டு பாய்ண்ட்களைக் குறைத்து வைக்க அறிவுருத்தினர்.

ஜோதிகா: இந்நிலையில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்தும் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் பரவும் கருத்து குறித்தும் தெரிவித்திருந்தார். அதாவது படம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துகளில், "சூர்யாவின் மனைவியாக இதனை எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவேண்டும் எனும் சூர்யாவின் கனவை நினைத்து பெருமைப் படுகின்றேன். படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதி.

jyothika suriya kanguva

பாராட்டு: ஆனால் கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டே தவறான கருத்துகள் பகிரப்பட்டுக்கொண்டே உள்ளனர். படத்தின் கேமரா வேலைப்பாடு, 3டி தொழில்நுட்பம், பெண்கள் சண்டை செய்யும் காட்சிகள் என பல விஷயங்கள் படத்தில் பாராட்டும் விதமாக உள்ளது அது குறித்து யாருமே கருத்து தெரிவிக்கவில்லை என ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

மீம்: இந்நிலையில் இணையவாசிகள் ஜோதிகாவின் பதிவுக்கு மீம்களை உருவாக்கி கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக வடிவேலு அடிவாங்கி முடித்தப்பின்னர் மீண்டும் அவரை அடிவாங்க வைக்கும் தீப்பொறி திருமுகம் கதாபாத்திரத்தின் காமெடியைப் பகிர்ந்து அதில் ஜோதிகா என கேப்ஷன் இட்டுள்ளனர். அதாவது கங்குவாவை ரசிகர்கள் அடித்துத் துவைத்தபின்னர் மீண்டும் ரசிகர்களிடத்தில் கங்குவாவை அடிவாங்க வைக்கின்றார் எனக் கூறி வருகின்றனர்.

jyothika suriya kanguva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X