For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸுக்கும் அர்ச்சனா அக்காவுக்கும் இன்னைக்கு செம சண்டை இருக்கப் போகுது என முதல் புரமோவை பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்களை, இப்படி மூன்றாவது புரமோ போட்டு ஆஃப் பண்ணிட்டீங்களே என மீம்கள் பறக்கத் தொடங்கி விட்டன.

  Bigg Boss 4 Tamil Unseen Video | Day 23 • 'என்ன நினச்சினு இருக்க' Shivani ஆவேசம்

  முதல் புரமோ சண்டை, இரண்டாவது புரமோ காதல், மூன்றாவது புரமோ தாய்மை என புரமோவிலே மொத்த கதையும் சொல்லிட்டா, அப்புறம் நைட் நிகழ்ச்சியை யார் பார்க்குறது எடிட்டர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரொம்பவே துரோகம் செய்கிறார் என நெட்டிசன்களின் குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன.

  சீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

  பிக் பாஸ் புண்ணியத்தால

  பிக் பாஸ் புண்ணியத்தால

  பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்க 4வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அதன் போட்டியாளர்களையும் அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செய்யும் வேலைகளையும், போடும் சண்டைகளையும், ரொமான்ஸ்களையும் மீம்களாக போட்டே ஏகப்பட்ட மீம் கிரியேட்டர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

  பாலாஜி vs அர்ச்சனா

  பாலாஜி vs அர்ச்சனா

  பயில்வான் பாலாஜி முருகதாஸுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே டுபாக்கூர் சண்டை நடைபெற்றது. யார் நம்பர் ஒன் டுபாக்கூர் போட்டியிலேயே அந்த சண்டை அப்படியே முடிவுக்கு வந்து சமாதானம் ஆனது. இப்போ அடுத்ததாக அர்ச்சனா அக்காவுக்கும் பாலாஜிக்கும் அம்மிக் கல் சண்டை ஆரம்பமாக, பாலாவுக்கு எதிராக குரூபிஸம் கேங்கே ஒண்ணு கூடிட்டாங்க..

  யார் மேல தப்பு

  யார் மேல தப்பு

  நேற்றைய எபிசோடில், வேல்முருகனை பல முறை தூண்டி விட்டு அர்ச்சனா அக்கா பாலாஜியை வீடு பெருக்க சொன்னதும், அதற்கு தூங்கிட்டு இருக்கேன் பண்ண முடியாது என மறுத்ததும் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டையை உருவாக்கியது. இந்நிலையில், இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள், யார் மேல தப்பு இருக்கு என ஒரு பெரிய விவாதத்தையே டிரெண்ட் செய்து நடத்தி வருகின்றனர்.

  கில்லி அக்கா நீ

  கில்லி அக்கா நீ

  அர்ச்சனா அக்கா ஓவர் ஆக்டிங் பண்ணி பாலாவை காண்டாக்கிய நிலையில், நானும் நடிக்க பழகிக்கிறேன் என கார்டன் ஏரியாவில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு அழுத பாலாவை பார்த்த ரசிகர்கள், "ஸ்ட்ராங்கா இருந்த பாலாவை அழுவ வச்சிட்ட.. கில்லி அக்கா நீ" என ரியோ சொல்வது போல உருவாக்கப்பட்ட மீம்களும் வைரலாகி வருகின்றன.

  ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட்

  ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட்

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ஆக்‌ஷனும், இரண்டாவது புரமோவில் ரொமான்ஸும் மூன்றாவது புரமோவில் சென்டிமென்ட்டும் வைத்து பிக் பாஸ் எடிட்டர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே இருக்கு என சொல்ல வருவதை தனுஷின் வேலையில்லா பட்டதாரி படக் காட்சிகளும் கம்பேர் பண்ணி பங்கம் பண்ணி உள்ளனர்.

  ஷிவானி ரசிகர்கள்

  ஷிவானி ரசிகர்கள்

  சின்னத்திரை நடிகை ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில், அவர் பாலாவுடன் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து இருப்பதை பார்த்த ரசிகர்கள், சந்திரமுகியில் வடிவேலு போல இடை மறித்து, இவன் மட்டும் உனக்கு வேணாம்டா செல்லம் என வேற லெவல் மீம் போட்டு வருகின்றனர்.

  கமல் சார் பாவம்

  கமல் சார் பாவம்

  முதல் புரமோவில் சண்டை போடுறீங்க, 3வது புரமோவில் சமாதானம் ஆகிடுறீங்க அப்புறம் கமல் சாருக்கு என்னடா வேலை இருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளாகவும், மீம்களாகவும் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்ய ட்விஸ்டுகளை புரமோவிலே வெளிப்படுத்தி எடிட்டர் நிகழ்ச்சிக்கு ரொம்ப துரோகம் பண்ணுவதாகவும் புலம்புகின்றனர்.

  English summary
  Meme Creators troll today Bigg Boss Tamil 4 promos will reveal all the twists and turns itself and it makes the Bigg Boss 4 show such a boring.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X