நீங்கள் இனி ரசிகர்கள் இல்லை.. Virtual warriors.. மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்த விஜய்!
சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டுள்ளது. தற்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடிப்பு மற்றும் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில், சினிமாவில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்று, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்கிடையில், இணையத்தில் விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் Virtual warriors என பெயர் சூட்டியுள்ளார்.
இதற்காக விஜய் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இப்படியான நிலையில் தான், மீம் கிரியேட்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களை கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக Virtual warriors என்ற வார்த்தையை மையமாகக் கொண்டு பல்வேறு மீம்களை இமேஜாகவும் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இது தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும் போது, இந்திய அளவில் நமது ஐ.டி விங் தான் சிறந்தது எனக் கூறுகிறார்கள். எனவே இணையத்தில் கட்சியின் கொள்கைகளை பேசுகிற நமது கட்சி தோழர்களுக்கு Virtual warriors என பெயர் சூட்டுகிறேன்" எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Virtual warriors: இப்படியான நிலையில் சும்மா இருந்த மீம் கிரியேட்டர்களுக்கு நான் தருகிறேன் கண்டெண்ட் என விஜய் பேசியுள்ள விஷயம் மாறியுள்ளது. அதாவது விஜய் ரசிகர்கள் இதற்கு முன்னர் செய்த சில ஆர்வக்கோளாறு விஷயங்களையும், பல படங்களில் உள்ள காட்சிகளையும் மீம் டெம்ப்ளேட் மற்றும் மீம் வீடியோக்களையும் வெளியிட்டு விஜய், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆகியோரை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
மீம்: இந்தியன் 2 படத்தின் சித்தார்த்தை காவல்துறையினர் விசாரிக்கும்போது, தனது பெயரைச் சொல்லி சோசியல் மீடியா எனக் கூறுவார். இந்த காட்சிக்கு தியேட்டரில் குபீர் என சிரித்த ரசிகர்கள் பலர். அந்த மீம் டெம்ப்ளேட் வைத்து, சித்ரா அரவிந்தன் Virtual warrior என ஒரு மீம் இணையத்தில் வேகமாக உலா வருகிறது. அதேபோல், ரௌத்ரம் படத்தில் வரும் சத்யனின் காமெடிகள் விஜய் மற்றும் விஜயின் Virtual warriors-ஐக் கலாய்க்க கச்சிதமாக பொருந்தி போயுள்ளது.

கண்டெண்ட்: இது மட்டும் இல்லாமல், விஜய் படங்கள் ரிலீஸ் ஆன போது யூடியூப் சேனல்கள் தொடங்கி ஊடகங்கள் வரை அனைத்திற்கும் விஜய் ரசிகர்கள் கொடுத்த சில, குபீர் சிரிப்புகள் வர வைக்கும் பேட்டிகள் என அனைத்தையும் தேடித் தேடி எடுத்து Virtual warriors-ஐ கலாய்த்து வருகிறார்கள். எது எப்படியோ காய்ந்து போய்க் கிடந்த மீம் கிரியேட்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல்ல கண்டெண்ட் கொடுத்துள்ளார் என சில இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது என படக்குழு முன்னரே தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











