இது நாடக காதலுக்கு முடிவு கட்டுவதற்கான அறிகுறி.. பாகுபலியை வைத்து திரௌபதிக்கு தெறிக்கும் மீம்ஸ்!

சென்னை: திரௌபதி படம் பெரும் பேசு பொருளாகியுள்ள நிலையில் அப்படம் குறித்து கலவையான மீம்ஸ்கள் தெறிக்கவிட்டு வருகின்றன.

Recommended Video

BJP Gayathri blind support to Draupathi | Pa. Ranjith Tweet

ரிலீஸ் ஆகும் முன்பே பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனது திரௌபதி. இந்நிலையில் பெரும்பாடுபட்டு படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியிருக்கிறது.

காலை முதல் சமூக வலைதளங்களில் திரௌபதி படம் குறித்த பேச்சாகதான் உள்ளது. திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் படம் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவது படத்திற்கு கூடுதல் விளம்பரமாக உள்ளது.

கொடூரமா இருக்கா..

இந்நிலையில் படம் குறித்து மீம்ஸ்களும் இணையத்தில் வலைய வந்து அதிர விட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வலைய வரும் மீம்ஸ்களில் சிலவற்றை இங்கு காணலாம்.. திரௌபதி படம் வெளியான தியேட்டரின் முன்பு திரௌபதி வேடமிட்டு நின்றவிரன் போட்டோவை வெளியிட்டு என்னடா திரௌபதி இவ்ளோ கொடூரமா இருக்கா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அந்த அறிகுறி

இது நாடக காதலுக்கு முடிவு கட்டுவதற்கான அறிகுறி.. என பாகுபலி படத்தில் வரும் டயலாக்கையும் காட்சியையும் வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த மீம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பலரும் இந்த மீமை ரீடிவிட் செய்து வருகின்றனர்.

சிக்கியிருச்சு

படத்தின் ஹிரோவான ரிச்சர்ட் ரிஷியை வைத்து
ஒரு சிறுத்தைக் குட்டி சிக்கியிருச்சு வச்சு செய்யுங்கடா என வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் காட்சியை வைத்து கிண்டலத்திருக்கின்றார் இந்த நெட்டிசன். இந்த மீமும் பலரால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு

நாடகக்காதல் குரூப் Vs #திரெளபதி.. என பதிவிட்டு ஜல்லிக்கட்டின் போது மைதனாத்தில் இறங்கிய காளையை பார்த்து மிரண்டு வீரர்கள் தடுப்பு வேலியின் மீது ஏறி நின்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன். இந்த மீமும் அதிக லைக்ஸை பெற்றிருக்கிறது.

அஜித் கையில் அரிவாள்

ரியல் #திரெளபதி என நடிகர் அஜித்துக்கு திரௌபதி வேஷத்தை போட்டு விட்டு, கையில் திரௌபதி என பதிவிடப்பட்ட அரிவாளை வைத்திருப்பது போன்ற மீம்மை கிரியேட் செய்துள்ளனர். இந்த மீமும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நினைக்காதீங்க

அப்பா, திரௌபதி பார்த்த பிறகு தான் புரிஞ்சிக்கிட்டேன், நான் நீங்க பார்க்குற பையனையே.. அப்டினு மட்டும் சொல்லுவேனு நினைக்காதீங்க... என ரன் படத்தில் விவேக், தனது தந்தையிடம் பேசும் காட்சியை வைத்து இப்படி ஒரு மீமை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

கேட்க மாட்டாங்க..

டீக்கடைக்கார அண்ணே.. திரௌபதி படம் ஹிட்டுன்னு சொல்லுங்க.. யார்கிட்ட..? யாரும் கேட்க மாட்டாங்க.. நீயா யாரையாவது கூப்ட்டு சொல்லு.. என சிவகார்த்திகேயனும் சூரியும் ஒன்றாக இருக்கும் காட்சியை வைத்து திரௌபதி படத்தை மரண பங்கமாய் கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

150 கோடி கலெக்ஷன்

11 மணி வரைக்குமே கலக்சன் 150 கோடி தாண்டுமாமே #திரெளபதி தம்பி தம்பி.. கும்கி படத்தின் காட்சியை வைத்து திரௌபதி படத்தை பங்கமாய் கலாய்த்திருக்கின்றார் இந்த நெட்டிசன். இந்த மீமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அசுரர்களையா?

வதம் செய்தாள் #திரௌபதி.. அசுரர்களையா மச்சான்?
இல்ல மாமா‌... தியேட்டர்ல படம் பார்க்க வந்தவங்களை மாமா.. என படம் மொக்கை என்பதை போல தேசிங்கு ராஜா படத்தின் காட்சியின் சூரியை வைத்து திரௌபதி படத்தை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

விமர்சகர் பாண்டா

இந்த படத்துக்கு ஆஸ்கர் அவார்ட் கொடு ட்ரம்பே! இல்லேன்னா தீக்குளிப்பேன்" - தோலக்பூரில் விமர்சகர் பாண்டா ஆர்ப்பாட்டம். என இன்று பெரும் பேசு பொருளாகியுள்ள திரௌபதி படத்தை படு மோசமாக கிண்டல் செய்திருக்கின்றனர். இந்த பதிவும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

திருமாவிடம் லிஃப்ட்

சார் சார் கொஞ்சம் சாந்தி தியேட்டர்ல ட்ராப் பண்ணுங்க சார் #திரௌபதி படத்துக்கு டைம் ஆச்சு.. என நடிகர் வடிவேலு திருமாவளவனிடம் லிஃப்ட் கேட்பது போல் உள்ளது இந்த மீம். இந்த மீமூம் சமூக வலைதளங்களில் திரௌபதி படத்தின் ஆரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதிக லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X