பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக இவங்க தான் ரொம்ப ஆவலாக இருக்கிறார்கள்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று பார்வையாளர்களை விட வேறு ஒரு கூட்டம் தான் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது. கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் வேறு துவங்குவதால் இந்திய அணி விளையாடாத நாள் அன்று நிகழ்ச்சியை துவங்கினால் நல்லது.

இந்திய அணி விளையாடும் நாளில் நிகழ்ச்சியை துவங்கினால் அதை பார்க்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று பார்வையாளர்களை விட மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் வேறு எந்த கான்செப்ட்டையும் தேடத் தேவையில்லை. 100 நாட்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை வச்சு செஞ்சுடுவார்கள். அதனால் தான் பிக் பாஸுக்காக காத்திருக்கிறார்கள்.
போட்டியாளர்களை மட்டும் அல்ல அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனையும் அவர்கள் விட்டு வைப்பது இல்லை. தற்போதே ஏதாவது அப்டேட் வராதா என்று தினமும் சமூக வலைதளங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இம்முறை யார் எல்லாம் மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி படாதபாடு படப்போகிறார்களோ.


Click it and Unblock the Notifications











