பிக் பாஸ் அபிராமியை எந்த அபிராமியுடன் ஒப்பிடுகிறாங்கன்னு பாருங்க
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமியை வைத்து தான் ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிய வேகத்தில் அதுவும் முதல் நாளே காதல் காட்சியை வைத்துவிட்டனர். அது எப்படி பாஸ், முதல் நாளே காதல் வரும் என்று கேட்காதவர்களே இல்லை.
இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அபிராமியை கலாய்த்து மீம்ஸ் போட்டுத் தாக்குகிறார்கள்.
மீம்ஸ்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமியை எந்தெந்த அபிராமிகளுடன் ஒப்பிட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அந்தம்மா பார்வையாளர்களை கடுப்பேற்றினாலும் அந்த அளவுக்கு மோசம் இல்லை. ஸ்க்ரிப்டில் இருப்பதை தானே செய்கிறார். இன்று மீரா மிதுனுக்கு தண்ணீர் எல்லாம் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
மீரா மிதுன்
அபிராமியை அந்த அளவுக்கு தெரியாது என்று மீரா மிதுன் கூறியது சுத்தப் பொய் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். அது என்னவோ மீராவை பார்த்தாலே ரசிகர்களுக்கு பத்திக்கிட்டு வருது. அவரை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். மீரா வந்ததால் அபிராமி கொஞ்சம் தப்பித்தார் என்றே கூற வேண்டும்.
லாஸ்லியா
பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பதிலேயே வேஸ்ட் பீஸ் லாஸ்லியா என்கிறார்கள் நெட்டிசன்கள். சாப்பிட, தூங்க, டான்ஸ் ஆட, வேடிக்கை பார்ப்பதை தவிர லாஸ்லியா ஒன்றும் செய்வது இல்லை என்கிறார்கள். கடந்த சீசனில் டைட்டில் வென்ற ரித்விகாவுக்கே லாஸ்லியா டஃப் கொடுக்கிறார் என்று கிண்டல் செய்கிறார்கள்.
கிரஷ்
என்னங்கய்யா நடக்குது பிக் பாஸ் வீட்டில். இதை எல்லாம் கேட்க ஆளே இல்லையா. அந்தம்மா அபிராமி வந்த அன்றே கவின் மீது கிரஷ் என்கிறது. அந்த கவினோ அபிராமியை கட்டிப்பிடிக்கிறார். முடியலடா, 90ஸ் கிட்ஸுக்கு இருப்பதோ சின்ன ஹார்ட் அதை உடைச்சுடாதீங்க பிக் பாஸ்.
பாத்திமா பாபு
பாத்திமா பாபுவையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மரணமாக கலாய்க்கிறார்கள். அவரை வைத்து வேறு விதமாகவும் மீம்ஸ் போட்டுத் தாக்குகிறார்கள்.
கவின்
யார் என்ன செய்தாலும் கவின் அவரின் கடலை போடும் வேலையில் கரெக்டாக இருக்கிறார். அதனால் தான் வாயை மூடி பேசவும் என்று ஒரு டாஸ்க் கொடுத்து லாக் பண்ணியுள்ளார் பிக் பாஸ். பார்ப்போம், இன்றைய டாஸ்கில் கவின் என்ன செய்கிறார் என்று.


Click it and Unblock the Notifications











