'செல்ஃபி வித் சிவக்குமார்'... வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா?
நடிகர் சிவக்குமாரின் செல்ஃபி சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது.
சென்னை: நடிகர் சிவக்குமாரின் செல்ஃபி சம்பவத்தை வைத்து வித்தியாசமான மீம்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். நெட்டிசன்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்டவருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக்கொடுத்து சமரசமானார் சிவக்குமார்.

ஆனால் மீண்டும் அதே தவறை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் செய்தார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சித்தார். அப்போது அவரது செல்போனை அலட்சியமாக தட்டிவிட்டார் சிவக்குமார். இதுதொடர்பான வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலானது.
இதனால் மீண்டும் கடுப்பான நெட்டிசன்கள், சிவக்குமாரை கலாய்த்து வருகின்றனர். அப்படியாக யாரோ ஒரு குறும்புக்கார நெட்டிசன் உருவாக்கிய மீம்ஸ் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த மீம்ஸ் நான்கு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் படத்தில் ஒருவர் ஆபத்தான உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கிறார். இரண்டாம் படத்தில், சுறா மீனுடனும், மூன்றாம் படத்தில் மற்றொருவர் சிங்கத்துடனும் செல்ஃபி எடுக்கின்றனர். கடைசியாக நான்காம் படத்தில் ஒருவர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்கிறார்.
சிவக்குமாருடன் செல்ஃபி எடுப்பது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதாக இந்த மீம்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications











