»   »  அஜீத்தின் வேதாளம்... உலா வரும் மீம்ஸ்கள்...

அஜீத்தின் வேதாளம்... உலா வரும் மீம்ஸ்கள்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம்னு பேர் வச்சாலும் வச்சாங்க...டுவிட்டர், ஃபேஸ்புக்ல மீம்ஸ் போட்டு கலக்குறாங்க விஜய் ரசிகர்கள். சினிமா விமர்சகர்களும் வேதாளம் என்ற தலைப்பு மாஸ் ஹீரோவுக்கு ஏற்ற தலைப்பு இல்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் கதையோ படமோ கூட பிரச்சினை இல்லை நல்ல பேர் வைக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினையாக உள்ளது. பழைய படங்களின் பெயரை வைப்பது ஒரு புறம் இருக்க பீட்சா, பிரியாணி என்று வைத்து ஓட்டினர்.

படம் முடியும் வரைக்கும் பேரே வைக்காமல் ஒரு எதிர்பார்ப்பை ! ஏற்படுத்தினர். ஒரே பெயரை 2 படத்திற்கு வைத்து பஞ்சாயத்து செய்தனர். இப்போது அஜீத் படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மாஸ் டைட்டில்

மாஸ் டைட்டில் பேரு வைக்கிறேன்னு சொன்னாங்க... இந்த பேரு சொல்லத்தான் இத்தனை நாளா? என்று கேட்டுள்ளனர் சிலர்.

தலைப்பு சரியில்லையே

மாஸ் ஹீரோவுக்கு போய் இப்படி ஒரு தலைப்பா என்று கேட்டுள்ளனர் சிலர்.

ஏன் இப்படி?

ஆதி பகவான் ஜெயம் ரவியின் படத்தைப் போட்டு கூடவே வேதாளத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் போட்டு மீம்ஸ் அடித்துள்ளனர் ரசிகர்கள்.

இதுக்குத்தான் இந்த யோசனையா?

படத்திற்கு கதை சொல்ல ஒரு குழு இருப்பது போல தலைப்பு சொல்ல ரூம் போட்டு யோசிக்கலாமே?

அதிர்ச்சி

தலைப்பை கேட்ட உடன் அஜீத் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு இந்த வடிவேலு மீம்ஸ்.

    English summary
    Memes are on rounds on Ajith's new movie Vedhalam on social media.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil