அவரு புடிச்சிட்டாரு.. ஹவுஸ்மேட்ஸ் மனச புடிச்சிட்டாரு.. வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோவின்படி சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்படுவதாக தெரிகிறது.
இன்று வெளியான புரமோவில் ஜனநாயக முறைப்படி போட்டியாளர்களை தேர்வு செய்யுங்கள் என்று போட்டியாளர்களை முன்னிறுத்துகிறார் கமல்.
ஷிவானி, சுரேஷ், ரேகா ஆகியோரின் பெயர்களை அறிவிக்க போட்டியாளர்கள் தங்களின் கைகளை தூக்கி ஓட்டு போடுகின்றனர்.
அதன்படி ஷிவானி 3 ஓட்டுகளை பெறுகிறார். அதிகப்பட்சமாக சுரேஷ் சக்கரவர்த்தி 7 ஓட்டுகளை பெறுகிறார். இதன் மூலம் அவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியை வைத்து ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

மனச புடிச்சிட்டாரு
இந்த மீமில் ஹவுஸ் மேட்ஸ் அதிக ஓட்டுகளை அளித்ததை தொடர்ந்து, அவரு புடிச்சிட்டாரு.. ஹவுஸ்மேட்ஸ் மனச புடிச்சிட்டாரு.. என குறிப்பிட்டுள்ளனர்.

நாமினேட் செய்ய முடியாது
இந்த மீமில் ஷிவானிக்கு 3 வாக்குகள் கிடைதுள்ளது என அதற்கான போட்டோவும் சுரேஷ்க்கு அதிகப்பட்சமாக 7 ஒட்டுகள் கிடைத்துள்ளது என அதற்கான போட்டோவும் சுரேஷ் 2வது வாரம் கேப்டனாகி விட்டார்.. மூன்றாவது வாரத்திற்கு அவரை நாமினேட் செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்து உஷாரு
இந்த மீமில் ரேகாவுக்கு புரோக்கன் ஹார்ட் கொடுக்கும் போது, ரேகா எக்ஸ்க்யூஸ்மி என கேட்கவும்.. சுரேஷ் நோ.. உஷ் என சொல்லும் படியாக உள்ளது.. மேலும் தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாஸ் காட்றாருல..
மற்றொரு மீமான இதில் தலைவன் சுரேஷ் புரமோல மாஸ் காட்றாருல என்பதாக வடிவேலு தனது சகாக்களுடன் மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கும் போட்டோவை வைத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்ல இருந்தா..
இந்த மீமில் அனிதா சுரேஷ் சக்கரவர்த்திக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்ததை தொடர்ந்து இது என்ன முதல்லருந்து ஸ்டார்ட் பண்ணுது என கேட்கும் படியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











