twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்

    |

    சென்னை : சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது எப்படி புதிது இல்லையோ, அதே போல் அரசியல்வாதிகள் சிலர் படங்களில் நடிப்பதும் புதியது இல்லை. சினிமா துறையை சேர்ந்த நபர்கள் மட்டுமல்ல, சில படங்களும் தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன.

    அரசியல், தேர்தல் பற்றிய பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மறக்கமுடியாதவைகளாக நெஞ்சில் இடம் பிடித்துள்ளன. அவற்றில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த, ரசித்த சில படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    என்ஜிகே

    என்ஜிகே

    சூர்யா நடித்த என்ஜிகே படம், பதவிக்கு வர துடிக்கும் இளைஞனை பற்றிய கதை. பதவிக்காக அரசியலில் அவன் கையில் எடுக்கும் குறுக்கு வழிகள், தனது சொந்த குடும்பத்தையே கொலை செய்யும் அளவிற்கு செல்வதை விளக்கி உள்ள படம்.

    கொடி

    கொடி

    காதலர்கள் இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்து, தேர்தலில் பங்கேற்பது. கட்சியில் பெரிய அளவில் வர வேண்டும் என்பதற்காக காதலனையே கொலை செய்யும் பெண். ஆனால் எதிர்பாராத விதமாக காதலனின் இரட்டை பிறவியான தம்பி அரசியலுக்கு வந்து பழிவாங்குவதை காட்டும் படம். தனுஷ், த்ரிஷா நடித்திருந்த இப்படம் அரசியல் கலந்த காதல் படம்.

    ஆயுத எழுத்து

    ஆயுத எழுத்து

    வேறு வேறு சூழ்நிலைகளில் வாழும் 3 இளைஞர்களை பற்றிய கதை. நாட்டின் மீது பற்று கொண்ட இளைஞர்கள் எவ்வாறு அரசியல் மற்றும் ரவுடிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற போராடுகிறார்கள் என்பதை கூறும். இதில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

    முதல்வன்

    முதல்வன்

    டிவி கேமிராமேனாக இருக்கும் ஒருவருக்கு மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் செய்யும் மாற்றங்கள், மக்களின் வரவேற்பை பெற்று மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, நாட்டை தூய்மைபடுத்துவது ஆகியவற்றை விறுவிறுப்பாக கூறிய படம். அர்ஜூன், ரகுவரனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

     சர்கார்

    சர்கார்

    மல்டி நேஷனல் கம்பெனியின் சிஇஓ ஒருவர், கள்ள ஓட்டாக போடப்பட்ட தனது ஓட்டை செலுத்துவதற்காக போராடுவது, அதனால் ஏற்படுத்தும் புரட்சிகரமான மாற்றங்களை சொல்லிய கதை. இதில் விஜய், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

    கோ

    கோ

    பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக தனது சொந்த கட்சி கூட்டத்திலேயே வெடிகுண்டு வைக்கும் இளைஞரின் உண்மை முகத்தை, பத்திரிக்கை போட்டோகிராஃபர் ஒருவர் எப்படி வெளிக் கொண்டு வருகிறார் என்பது தான் கதை.

    நோட்டா

    நோட்டா

    எதிர்பாராத சந்தர்ப்பத்தால் முதல்வராகும் இளைஞர், தனது பொறுப்பை உணர்ந்து, பல பிரச்னைகளை கடந்து மக்களுக்கு நல்லது செய்ய எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் கதை. பல அரசியல் சூழ்ச்சிகள், சிக்கல்களை சமாளிக்கும் படம்.

    அமைதிப்படை

    அமைதிப்படை

    அரசியல் நையாண்டி படமான இப்படத்தில் சத்யராஜ், மணிவண்ணன் நடித்திருந்தனர். தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காத கட்சி மீதான அதிருப்தியில், சாதாரண மனிதன் ஒருவனை அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பது. பதவிக்கு வரும் அந்த நபர் செய்யும் அநியாயங்களை நக்கல் கலந்து சொல்லி இருக்கும் படம்.

    English summary
    Memorable elections, Political dramas in Tamil films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X