வெளியானது மெமரீஸ் படத்தின் டீசர்.. மீண்டும் வித்தியாசமான கதைகளத்தில் நடிகர் வெற்றி

சென்னை: வெற்றி நடித்த 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்களாகும்.

இதையடுத்து வெற்றியின் படங்கள் மீது ரசிகர்கள் பார்வை திரும்பியுள்ளது. வெற்றி நடிப்பில் மெமரீஸ் திரைப்படம் அடுத்து வெளிவரவுள்ளது.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

வெற்றி நடித்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வெளியான 8 தோட்டாக்கள் & முக்கோண விதியை அடிப்படையாக கொண்டு கோபிநாத் இயக்கத்தில் வெளியான ஜீவி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

கவனம் பெற்றார்

கவனம் பெற்றார்

இப்படி நல்ல கதைகளில் நடித்து கவனம் பெற்ற வெற்றி C/O காதல் படத்திலும் நன்றாக நடித்திருந்தார். இதையடுத்து வெற்றியின் நடிப்பில் மெமரிஸ், வனம், தீங்கிரை, ஜோதி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது. ரசிகர்களுக்கு இந்த படங்கள் மீதும் ஆர்வம் கூடியுள்ளது.

ஸ்யாம் பிரவீன் - வெற்றி

ஸ்யாம் பிரவீன் - வெற்றி

இந்நிலையில் இயக்குனர் ஸ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் மெமரீஸ் படத்தின் Audio Rights ஐ Lahari Music வாங்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியானது. அதை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்வத்தை கூட்டுகிறது

ஆர்வத்தை கூட்டுகிறது

வழக்கம் போல வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ளார் வெற்றி என்பது டீசரை பார்த்தவுடன் உறுதியாகியுள்ளது. இசையமைப்பாளர் இமான், இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் ரஹ்மான் ஆகியோர் மெமரீஸ் படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டனர்.

More from Filmibeat

Read more about: memories movie படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X