twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அதேமாதிரி என்ன... அதே ட்யூனே போடலாம்..! - எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல் நினைவுகள்

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே திரைப்படங்களுக்கு இசையமைத்துப் பல பாடல்களை ஹிட் ஆக்கியவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ஆனாலும், ஒரே மாதிரியான ட்யூன்களால் சில வருடங்களில் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார்.

    படத்தின் அத்தனை பாடல்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ட்யூன்களைப் போட்டாலும், அத்தனை பாடல்களும் ஹிட் ஆகிவிடுவதற்கு அன்றைய காலகட்டத்தில் இருந்த மற்ற இசையமைப்பாளர்களின் இசையும் ஒரு காரணம். அவர்களில் இருந்து தனித்துத் தெரிந்த காரணத்தாலாயே தூக்கிக் கொண்டாடப்பட்டவர் வெகு சீக்கிரமாக வெளியேறியும் விட்டார்.

    குருநாதர் எம்.எஸ்.வி பற்றி எஸ்.ஏ.ராஜ்குமார் :

    குருநாதர் எம்.எஸ்.வி பற்றி எஸ்.ஏ.ராஜ்குமார் :

    'வாத்தியக் கருவியை மீட்டுவதால் வருவதல்ல இசை. இசைக் கருவியை இயக்குபவரின் இதயத்திலிருந்து வருவது இசை. அப்போதுதான் அந்த இசை கேட்பவர்களின் காதுகளில் நுழைந்து இதயத்தைத் தொடும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை எல்லா தரப்பு ஆட்களாலும் விரும்பப்படும் இசையாக இருப்பதன் காரணம் இதுதான். என்னைப் போன்றவர்கள் எல்லாம் அவரது அடியொற்றி வரவே ஆசைப்படுகிறோம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இது சம்பிரதாயத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. சத்திய வாக்கு.'

    ஒரே பாட்டு :

    ஒரே பாட்டு :

    'புது வசந்தம்' படத்துல ஒரு பாட்டுப் போட்டீங்களே... அதே மாதிரி ஒரு பாட்டு வேணும்' என டைரக்டர்கள் இவரிடம் கேட்பார்களோ என்னவோ..? 'அதே மாதிரி என்ன... அதே ட்யூனே இருக்கு...' என பிட்ச்களை ஏற்றி இறக்கி இன்னொரு பாடலையும் உருவாக்கி ஹிட்டாக்கி விடுவார். அந்தந்தப் படங்கள் வெளியாகும்போது பாடல்கள் வெகுவாக ரசிக்கப்பட்டாலும், ப்ளேலிஸ்ட்டில் ஒரே மாதிரியான பாடல்களே வருவது போலான உணர்வு உண்டானது.

    பாட்டுக்காகவே படங்கள் ஹிட் :

    இவர் இசையமைத்ததாலேயே ஹிட்டான பல படங்கள் இருக்கின்றன. அப்போதைய சில வெற்றிப்படங்களில் இவரது இசையை நீக்கிவிட்டுப் பார்த்தால் உப்புச்சப்பில்லாததாக இருக்கும். 'பூவே உனக்காக', 'சூரிய வம்சம்' போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்ததற்கு எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையும் ஒரு காரணம். கிராமப் புறங்களில் இளைஞர்களால் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல்கள் பெருமளவில் விரும்பப்பட்டன. 90-களின் இறுதியிலும், 2000-ன் தொடக்க காலங்களிலும் திருவிழாக்கள், கச்சேரிகள், திருமணங்கள் என மைக்செட், ஸ்பீக்கர்களில் ஒலித்தவை எல்லாம் அவரது பாடல்களே..!

    பாடலாசிரியர்கள் கூட்டணி :

    "எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
    நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
    உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களைப் பார்த்துக்கொள்கிறேன்
    பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பாக்கிறேன்...!"

    அவர் இசையமைத்த பாடல்களில் காணப்படும் ஒற்றுமை... அத்தனை பாடல்களிலும் எளிமையான வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். 90-களில் ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு இவர் இசையமைத்த பாடல்களையே டெடிகேட் செய்தனர். எளிமையான வரிகள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆர்மோனியத்தில் குழைக்கப்பட்டு அழகாயின என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பாடல்களின் ஹிட்டுக்கு பாதி க்ரெடிட் வாலிக்கும், ஏனைய கவிஞர்களுக்கும் உரித்தானவை.

    "இந்த பூமியே தீர்ந்து போய்விடில் என்னை எங்கு சேர்ப்பாய்
    நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
    நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகி போய்விடின் என் செய்வாய்
    உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர் தருவேன்
    ஏ ராஜா இது மெய்தானா..."

     'லாலாலா'தான் அவரோட ஃபேவரிட் :

    'லாலாலா'தான் அவரோட ஃபேவரிட் :

    சோகமான பாடல்களில்தான் 'லாலாலா..' கோரஸ் பாடவிடுவார் என்று இல்லை. கொண்டாட்டமமான பாடல்களிலும் அவர் 'லாலாலா'-வை நீளம் குறைத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.
    "சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
    வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்..."

    ஸ்வரங்களையும் ஸ்ருதிகளையும் மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என ட்ராஃப்ட்டில் இருக்கும் ட்யூன்களையே மெருகேற்றியதால், திரையுலகமும் வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிட்டது. காலம்தான் எல்லாம் தந்தது... காலமே இதையும் முடிவு செய்தது.

    92-களில் திரையிசைக்கு வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இவரது இசைக்குழுவில் வாசித்தவர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இவரது இசைக்கு கீபோர்ட் வாசித்தவர்தான்.

    English summary
    S.A.Rajkumar is an indian film music director. He has composed music for many south Indian films in Tamil, Telugu, Malayalam and Kannada languages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X