ஜிவி பிரகாஷின் ‘மெண்டல் மனதில்‘ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

சென்னை: தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மெண்டல் மனதில்' படத்தில் இருந்து 'உயிரே உயிரே' முதல் பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

selvaraghavan GV prakash
Photo Credit:

ஜிவி பிரகாஷின் மெண்டல் மனதில் : இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் 'உயிரே உயிரே' முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடல் வீடியோவை நடிகர் கார்த்திக் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் வரிகள் - வசீகர குரல் - இசை கோர்வை - என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

நிச்சயம் வெற்றி: 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக செல்வராகவன், ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- 'மென்டல் மனதில்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். மற்ற படங்களைப் போல இந்த படமும் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X