Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மனநலம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகர்.. ரஜினியின் உதவிக்காக 3 ஆண்டாக காத்திருக்கும் குடும்பம்!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க இவருக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தான் தன்னுடைய ரசிகர்களாலேயே சிறப்பான, இந்த நிலையில் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார் ரஜினி.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான தனது மகன் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சிகிச்சைக்காக ரஜினியிடம் உதவிக் கோரி 3 ஆண்டாக காத்திருப்பதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
சுபமுகூர்த்த
நேரத்தில்
நயன்தாரா
கழுத்தில்
தாலி
ஏறவில்லை..
பகீர்
கிளப்பும்
விக்னேஷ்
சிவன்
பெரியப்பா!

நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி இவரது நடிப்பில் சிவா இயக்கியிருந்த அண்ணாத்த படம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை எட்டியது.

தலைவர் 169 படம்
இந்நிலையில் தற்போது அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் விரைவில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தலைவர் 169 படத்தில் நெல்சன் இணைவது குறித்து கேள்விகள் எழுந்தன.

விரைவில் அறிவிப்பு
ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது படங்கள் உத்தரவாதமாக போட்டப் பணத்தை எடுத்துவிடும் என்பதால் அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விரைவில் சன் பிக்சர்ஸ் இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான ரசிகர்கள்
படத்தில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய வெற்றியில் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்போதுமே சிறப்பாக பங்கு உள்ளதாக ரஜினி எப்போதுமே கூறுவது வழக்கம். அவரது ரசிகர்களும் சூப்பர்ஸ்டார், தலைவர் என்று அவரை உருக்கமாக அழைத்து வருகின்றனர்.

மனநலம் பாதித்த ரஜினி ரசிகர்
இந்நிலையில் மதுரையை சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமி என்பவர், தன்னுடைய மகன் முத்தையா என்பவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்றும், ரஜினியின் படங்களை போஸ்டர் அடிப்பது உள்ளிட்டவற்றை செய்து சிறப்பாக கொண்டாடுவார் என்றும், அவர் கடந்த 2012ல் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உதவுவதாக உறுதி அளித்த ரஜினி
கடந்த 2019ல் சென்னையில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து இதுகுறித்து தான் மனு கொடுத்ததாகவும் அவர் தகுந்த உதவி செய்வதாக உறுதி அளித்ததாகவும் அந்த நேரத்தில் தான் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

3 ஆண்டுகளாக காத்திருப்பு
இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச முயன்றால் அலட்சியமாக நடத்துவதாகவும், ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் சென்று பார்க்க முயன்றால் அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முத்தையா வீட்டிலேயே மனநலன் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னுடைய பொருளாதார நிலையில் சிறப்பாக அமையவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.