செருப்பு மாலை.. இனிமே வணிகர்களை இழிவுப்படுத்துவீங்க.. பரிதாபங்கள் கோபி, சுதாகரை கண்டித்த வணிகர்கள்

சென்னை: வணிகர்களை இழுவுப்படுத்தியதாக 'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் போஸ்டருக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லாக்டவுன் நேரத்தில் காய்கறிகளை அதிக விலைக்கு வணிகர்கள் விற்பதாக சமீபத்தில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோவுக்கு எதிராக இந்த கண்டனத்தை முன் வைத்துள்ளனர்.

கோபி மற்றும் சுதாகர் போஸ்டருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பாலும் அடித்துள்ள வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

கோபி, சுதாகர்

கோபி, சுதாகர்

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் தனியாக பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலை தொடங்கி 38 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் வலம் வருகின்றனர். பல விஷயங்களை ட்ரோல் செய்து இவர்கள் வெளியிட்டு வந்த காமெடி வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

மீசையை முறுக்கு, மெர்சல், ஜாம்பி என ஏகப்பட்ட படங்களிலும் இவர்கள் நடித்துள்ளனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் புதிதாக மணி கம் டுடே கோ டுமாரோ எனும் படத்தில் இருவரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக அந்த படமும் இன்னும் வெளியாகவில்லை.

வணிகர்கள் கண்டனம்

வணிகர்கள் கண்டனம்

இந்நிலையில், சமீபத்தில் லாக்டவுன் 2.0 என இவர்கள் வெளியிட்ட யூடியூப் வீடியோவை கண்டித்து போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. வணிகர்களை அந்த வீடியோவில் மோசடிக்காரர்களாக சித்தரித்துள்ளதாகவும், லாக்டவுனை பயன்படுத்தி விலை வாசியை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக வெளியான வீடியோ தொடர்பாக கோபி மற்றும் சுதாகரை கண்டித்துள்ளனர்.

கார்ப்பரேட் கைக்கூலி

கார்ப்பரேட் கைக்கூலி

வியாபாரிகள் வேண்டுமென்றே ஒரு போதும் பேராசைக்காக விலையை உயர்த்தியது கிடையாது என்றும், சில கார்ப்பரேட் கைக்கூலிகள் இப்படி கிளப்பி விடுகின்றனர் என்றும் கொந்தளித்துள்ளனர். மேலும், வியாபாரிகள் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் இஷ்டத்துக்கு இப்படி வீடியோ வெளியிடுவது கண்டனத்துக்குரியது என்றும் கொதித்துள்ளனர்.

செருப்பு மாலை

செருப்பு மாலை

பன்னி போல இருவரையும் சித்தரித்து போஸ்டர் ஒட்டிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அமைப்பினர் கோபி மற்றும் சுதாகர் போஸ்டருக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்களது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

More from Filmibeat

Read more about: condemn கண்டனம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X