காத்ரீனா கைஃப் இருக்கும் போதே.. முத்த காட்சி குறித்து கேட்ட செய்தியாளர்.. விஜய் சேதுபதி நச் பதில்!
சென்னை: விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய விஜயசேதுபதி, தொடர்ந்து வில்லனாக நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்கிற பயம் இருக்கிறது என்றார். இதனால் கிட்டத்தட்ட 20 படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்றார்.
மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் இந்தி மொழியில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 12ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முக ராஜா, கவின் ஜெ பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்துள்ளார்கள்.

வில்லனா நடிச்சா மார்க்கெட் போயிடுமா? இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் ஒருவர் ஹீரோவா நடிக்கிறீங்க வில்லனா நடிக்கிறீங்க இதனால் மார்க்கெட் பாதிக்கும் என்கிற பயம் இருக்கா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த விஜய்சேதுபதி, நிச்சயமான அந்த பயம் இருக்கு ஏன் என்றால் வில்லனாக நடிக்கவே அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. அதுபோல சிறப்பு தோற்றத்தில் நடிக்க பல படத்திற்கு அழைப்பு வந்தது. மேலும், நாம் ஒரு தோற்றத்தில் நடிப்பதால் அது அந்த படத்திற்கு பலமாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் கேமியோ ரோலில் நடிக்க அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இது நான் ஹீரோவாக நடித்த படத்தை பாதித்ததால் கிட்டத்தட்ட 20 படத்திற்கு மேல் மறுத்துவிட்டேன். இது போலத்தான் வில்லன் கதாபாத்திரமும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் நோ சொல்லிவிட்டேன் என்றார்.
மகனுக்கு அட்வைஸ்: மேலும், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக தனது மகனுக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, ஒரு படத்தை எந்த மாயமோ, மந்திரமோ போட்டு மக்களை படம் பார்த்துவிட வைத்துவிட முடியாது, கடுமையான உழைப்பு அதற்கான ஆர்வம் இருந்தால் மட்டும் தான் அது திரையில் தெரியும். இயக்குநரை, தயாரிப்பாளரை மாற்றி விடலாம். ஆனால் கேமராவை ஏமாற்ற முடியாது கடுமையான உழைப்பு இருந்தால் போதும் என்றார்.
சட்டென கோபமான விஜய் சேதுபதி: இதையடுத்து, செய்தியாளர் ஒருவர் இந்தி பற்றி கேள்வி எழுப்பினார். இதனால் சட்டென கோபமான விஜய் சேதுபதி, எதற்கு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க. ஏற்கனவே அமீர் கான் சார் வந்த போதும் இந்த கேள்வியை கேட்டீங்க, எதற்கு இந்த கேள்வியை நடிகர்களிடம் கேட்குறீங்க, என்ன மாதிரி ஆட்களிடம் இந்த கேள்வியை கேட்டு என்ன ஆக போகுது. மேலும், இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு நீங்க கேள்வியை தப்பா கேட்குறீங்க என்றார்.
என்ன இப்படி கேட்டுட்டீங்க: மேலும், மெரி கிறிஸ்துமஸ் படத்தில் காத்ரினா கைஃப்புடனான முத்தக்காட்சி குறித்து செய்தியாளர் கேட்க, என்ன சொல்வது என்று திகைத்துப்போன விஜய் சேதுபதி, அய்யோ, இப்படி கேட்டுட்டீங்களே நான் என்ன சொல்வது என்று சிரித்தார். இந்த படத்தில் நான் காத்ரினா கூட நடிப்பதே ஆச்சரியம் தான். மெரி கிறிஸ்துமஸ் படத்தில் காத்ரினா எனக்கு ஜோடி என்று நான் நம்பவே இல்லை. எங்க ரெண்டு பேரையும் ஜோடியா என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இதை இயக்குநர் எப்படி யோசித்தார் என்று தெரியவில்லை. மேலும் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் என்று விஜய்சேதுபதி பதில் அளித்தார்.
என் கனவு நினைவானது: இதையடுத்து, பேசிய கத்ரீனா கைஃப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணியாற்றியதால் எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குநரான ஸ்ரீராம் ராகவனின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும், சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர் என்றார். மேலும், இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











