இந்தியிலும் மிரட்டப் போகும் மெர்சல்: பாஜகவிடம் நிறைய எதிர்பார்க்கும் தயாரிப்பாளர்கள்
மும்பை: மெர்சல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான் கானும், அக்ஷய் குமாரும் ஆர்வமாக உள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது. மேலும் படம் ரிலீஸான 6 நாட்களில் ரூ. 155 கோடி வசூல் செய்துள்ளது.
பாஜக எதிர்ப்பு என்கிற பெயரில் செய்த இலவச விளம்பரம் படத்திற்கு சூப்பராக உதவியது.

தயாரிப்பு
ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா காட்சிகளை பாஜக எதிர்க்க எதிர்க்க படத்திற்கு செம விளம்பரம் கிடைத்து சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இதை பார்த்த பிற தயாரிப்பாளர்கள் நம் படத்தையும் பாஜக எதிர்த்து விளம்பரம் கொடுக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

ரீமேக்
மெர்சல் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தி ரீமேக்கில் சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அக்கி
தென்னிந்திய மொழி படங்களை இந்தியில் ரீமேக் செய்து வெற்றி கண்டவர்கள் சல்மானும், அக்ஷயும். அதனால் மெர்சல் ரீமேக்கில் நடிக்க இருவரும் போட்டா போட்டி போடுகிறார்களாம்.

படங்கள்
சல்மான் கான் டைகர் ஜிந்தா ஹை, கிக் படத்தின் அடுத்த பாகம், ரேஸ் 3, பாரத் ஆகிய படங்களில் நடிக்கிறார். அக்ஷய் குமார் கோல்டு, கேசரி ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் யார் தளபதியாகி மெர்சல் பண்ணப் போகிறார்களோ?

எதிர்ப்பு
சல்மான், அக்ஷய் குமாருக்கு தற்போதே எதிர்ப்பு தெரிவித்து மெர்சல் ரீமேக்கிற்கு செமத்தியாக விளம்பரம் கொடுக்குமா பாஜக என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











