கேரளாவில் அதகளம்: கபாலியை பின்னுக்குத்தள்ளி பாகுபலியை விரட்டும் மெர்சல் வசூல்
திருவனந்தபுரம்:கேரளாவில் மெர்சல் படம் வசூலில் மெர்சல் செய்துள்ளது.
விஜய் அப்பா, மகன்கள் என்று 3 கதாபாத்திரங்களில் அதகளம் செய்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று பிரமாண்டமாக ரிலீஸானது. படத்திற்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என்று மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் நடிப்பால் நித்யா மேனன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விஜய்
தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். மெர்சல் படம் கேரளாவில் சுமார் 295 தியேட்டர்களில் வெளியானது.

வசூல்
மெர்சல் படம் ரிலீஸான அன்று மட்டும் கேரளாவில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது மெர்சல்.

கபாலி
பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் ரிலீஸான அன்று கேரளாவில் ரூ. 6.27 கோடி வசூலித்தது. இதையடுத்து ரூ. 4.27 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தில் கபாலி இருந்தது. தற்போது கபாலியின் இடத்தை மெர்சல் பிடித்துள்ளது.

தளபதி
கேரளாவில் தெறி பட ஓபனிங் வசூலை முந்தியுள்ளது மெர்சல். தெறி படம் ரிலீஸான அன்று ரூ. 3.16 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











