சென்னையில் ஓபனிங் கிங்கின் விவேகம் வசூலை முந்திய மெர்சல்
சென்னை: சென்னையில் அஜீத்தின் விவேகம் பட வசூலை முந்தியுள்ளது மெர்சல்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு ஒரு வழியாக ரிலீஸானது. பிரச்சனைகளாலேயே படத்தை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது.
மெர்சல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விவேகம்
ஓபனிங் கிங்கான அஜீத்தின் விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது.

வசூல்
அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது மெர்சல்.
மெர்சல்
வார நாளில் ரிலீஸாகியும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மெர்சல் நல்ல வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ. 68.01 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 81.08 லட்சமும் வசூலித்துள்ளது.
மெர்சல்மேனியா
மலேசியாவிலும் புதன்கிழமை ரிலீஸான மெர்சல் ரூ. 90.31 லட்சம் வசூல் செய்துள்ளது. மலேசியாவிலும் மெர்சல் மேனியாவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications