யுஎஸ்: விவேகம் பட மொத்த வசூலையும் 2 நாளில் குவித்த மெர்சல்!
அமெரிக்காவில் விஜய்யின் மெர்சல் படம் வசூலில் புது சாதனை நிகழ்த்தியுள்ளது. அஜித்தின் விவேகம் படத்தின் மொத்த வசூலையும் ஜஸ்ட் மூன்றே நாட்களில் மிஞ்சியுள்ளது மெர்சல்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அஜித்தின் விவேகம் படம் அமெரிக்காவில் இதுவரை 522,091 டாலர்களை வசூலித்துள்ளது. அஜித்துக்கு இதுதான் அதிகபட்ச வசூல், அமெரிக்கா மற்றும் கனடாவில்.

இந்த மொத்த வசூலையும் வெளியான இரண்டே நாட்களில் குவித்துவிட்டது விஜய்யின் மெர்சல். இந்த மூன்று நாட்களில் - சிறப்புக் காட்சியையும் சேர்த்து - 540,745 டால்களை வசூலித்துள்ளது.
விஜய்யின் தெறி படம் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. அந்த வரிசையில் மெர்சலும் சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மெர்சல் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications