ஷாருக், ஆமிர்கான் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங்கை உடைத்த 'மெர்சல்'!

By Vignesh Selvaraj

சென்னை : விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் 'மெர்சல்'. இப்படத்தைப் பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு திரை விருந்தாக படம் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஏனெனில், ஏற்கெனவே விஜய் - அட்லீ கூட்டணியில் வெளிவந்த 'தெறி' அமெரிக்காவில் செம்ம ஹிட் அடித்தது.

ரஜினி படங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது விஜய்யின் 'மெர்சல்' தான் என அமெரிக்க விநியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடல் தாண்டி

இந்தியாவில் மட்டுமல்லாது கடல் தாண்டி பல நாடுகளிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது மெர்சல். 3500 தியேட்டர்களுக்கு மேல் பலத்த ஆதரவோடு உலகல் முழுக்க வெளியாகியிருக்கிறது மெர்சல் திரைப்படம். இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் அங்கு 357K டாலர் வசூல் செய்துள்ளது.

மெர்சல் ஹிட்

மெர்சல் ஹிட்

தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என 'மெர்சல்' மூலம் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை வெளியான இந்தப் படம் முதல் நாளில் 357K டாலர் வசூலித்திருக்கிறது. இந்தத் தகவலை அமெரிக்காவில் படத்தை விநியோகித்த அட்மோஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை

பாக்ஸ் ஆபிஸ் சாதனை

அமெரிக்காவில் 132 இடங்களில் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. வார நாட்களில் ரிலீஸ் ஆகி இந்த அளவுக்கு வெற்றியைப் பெறுவது பெரிய விஷயம். ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'டங்கல்' படம் 327K டாலர் வசூல் செய்தது. ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'ராயிஸ்' படம் 347K டாலர் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

வசூல் அள்ளும்

வசூல் அள்ளும்

'மெர்சல்' படம் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் படத்தை எடுத்திருக்கிறார் அட்லீ. விஜய்யின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸால், உலகம் முழுக்க, வசூலை அள்ளுவது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X