தீபாவளி பாக்ஸ் ஆபீஸ்... உச்சத்தை தொட்ட சினிமா வசூல்!
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனில் தீபாவளி வசூல் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். முண்ணனி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் குமார் நடித்த படங்கள் ரீலீஸ் ஆனால் கூடுதல் வசூலுக்கு குறை இருக்காது.
இவ் வருட தீபாவளி அன்று விஜய் நடித்த மெர்சல், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மேயாத மான் சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் - ஆகிய மூன்று படங்கள் ரீலீஸ் ஆனது.

மெர்சல் தமிழ் நாட்டில் உள்ள 60% சதவீத தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது. எஞ்சியுள்ள தியேட்டர்களில் அதிகபட்சம் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் - 2 படங்கள் ரீலீஸ் ஆகின.
விஜய் நடித்த படங்களில் அதிக தியேட்டர்களில் ரீலீசான முதல்படம் மெர்சல் தான். இதனால் இவர் நடித்து வெளியான படங்களில் அதிகபட்ச வசூலை தொட்ட முதல் படம் மெர்சல் ஆனது.
இவற்றுக்கு காரணம் முண்ணனி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் ரீலீஸ் இல்லை என்பதுடன், தீபாவளி பண்டிகை நாள் என்பது முக்கிய காரணம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு டிக்கட் விற்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தது.
ஆனால் எந்த தியேட்டரிலும் அரசு நிர்ணயித்த விலையில் டிக்கட் விற்பனை செய்யப்படவில்லை. சென்னை நகரில் சில தியேட்டர்களில் நியாய விலையில் டிக்கட் குறைந்தபட்ச எண்ணிக்கையில் கிடைத்தது.
குறைந்த பட்சம் 150 முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரை மெர்சல் டிக்கெட் நேற்றைய தினம் தியேட்டர் கவுண்டர்களிலும், வெளியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளாலும் விற்கப்பட்டது.
சில ஊர்களில் 1000 ம் ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் சினிமா பார்ப்பதற்காக, அதனுடன் தொடர்புள்ள கேண்டின், பார்க்கிங் மூலம் தியேட்டர் கல்லாவுக்கு தீபாவளி அன்று வந்த பணம் 40 கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
கடந்த பத்தாண்டுகளில் எந்தவொரு தீபாவளி பண்டிகை அன்றும் இப்படி ஒரு வியாபார உச்சத்தை தொட்டதில்லை தியேட்டர் தொழில் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்.

நாற்பது கோடி ரூபாய் வரவில் 20 கோடி ரூபாய் மெர்சல் பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் ரூ 31 கோடி வசூலாகியுள்ளது. இது விஜய் படங்கள் இதுவரை செய்யாத சாதனை.


Click it and Unblock the Notifications











