தியேட்டர் முன்பு செம குத்தாட்டம் போட்ட மெர்சல் ரசிகை: வீடியோ இதோ
சென்னை: சென்னையில் மெர்சல் படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகை ஒருவர் செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் தடைகளை தாண்டி நேற்று வெற்றிகரமாக வெளியானது. படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சென்னையில் மெர்சல் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு விஜய்யின் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. படம் ரிலீஸான நேற்று ரசிகர்கள் தளபதியின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். ரசிகர்கள் இசைக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்டனர். சென்னையில் ரசிகை ஒருவர் தியேட்டர் முன்பு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய்க்கு ரசிகைகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications