twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெகா சிக்கலில் மெர்சல் வசூல்!

    By Shankar
    |

    தீபாவளி பண்டிகையையொட்டி ரீலீஸ் ஆக உள்ள மெர்சல் தலைப்பில் இருந்து பல்வேறு தடைகள், சங்கடங்களை சந்தித்து வருகிறது.

    வரி விலக்கு இருந்த போது அதிக விலைக்கு டிக்கட் விற்கக் கூடிய சூழலில் விஜய் நாயகனாக நடித்து வெளியான துப்பாக்கி, தெறி ஆகிய படங்கள் மட்டுமே வசூலில் 45 கோடியை (ஷேர்) கடந்த படங்கள். அந்த படங்களின் பட்ஜெட், விஜய் வாங்கிய சம்பளம் குறைவு.

    Mersal collection will surely drop

    மெர்சல் படத்திற்கான பட்ஜெட் 125 கோடிக்கு மேல் என்கிறது தயாரிப்பு தரப்பு. தமிழ் படங்களின் வியாபார எல்லைகள் விரிவடைந்தாலும் பிரதான வசூல் தளமாக இருக்கும் தமிழ்நாட்டில் வசூல் குறைவாகவே உள்ளது.

    திரைத்துறையினருக்கும் - தமிழக அரசுக்கும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுக்கு இரு தரப்பும் வந்துள்ளனர். ஏற்கெனவே மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட கட்டணத்தில் மாறுதல் இல்லை.

    தமிழ்நாடு முழுவதும் தனி திரையரங்குகளுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிக பட்சம் 100 ரூபாய் எனவும் ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் அதிக பட்டம் 80 ரூபாய் எனவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அரசு நிர்ணயித்த டிக்கட் கட்டணத்தை விட அதிகமான விலைக்கு தியேட்டர்களில் டிக்கட் விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு மெர்சல் படத்தை தயாரித்துள்ள தேணான்டாள் நிறுவனத்திற்கும், படத்தை திரையிட உள்ள தியேட்டர்களுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    வியாபார முறையே மாற்றம் காண இருப்பதால் விஜய் படம் முதல் வாரத்தில் வசூலிக்கும் தொகை குறையும்.

    தியேட்டர்களில் விஜய் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி, ஓபனிங் ஷோவுக்கான டிக்கட்டுகள் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படும்.

    இதன் மூலம் முதல் மூன்று நாட்களிலேயே 45 கோடி மொத்த வசூல் தமிழ்நாட்டில் கிடைக்கும். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கட் விற்பனை என்கிற போது இது பாதியாக குறையும். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தமிழகத்தில் குறைந்த பட்சம் 150 கோடி வசூல் ஆனால் மட்டுமே GST, உள்ளாட்சி வரி, தியேட்டர் வாடகை, ஷேர் கழித்து சுமார் 60 கோடி நிகர வருவாயாக கிடைக்கும். தற்போதைய டிக்கெட் கட்டணத்தில் இது சாத்தியமில்லை என்பதே உண்மை.

    English summary
    The Box office estimation for Vijay's Mersal is Rs 30 cr only in the first week, as per the present ticket rates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X