'மெர்சல்' தொட்ட புதிய மைல்கல்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹேமா!

By Vignesh Selvaraj

Recommended Video

மெர்சல் 100வது நாள் கொண்டாட்டம்- வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.

வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' திரைப்படம் இன்று நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.

மெர்சல் நூறாவது நாளைத் தொட்டதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மெர்சல்

மெர்சல்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த 'மெர்சல்' படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.

மெர்சல் நூறாவது நாள்

மெர்சல் நூறாவது நாள்

பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது 'மெர்சல்'. தற்போது மெர்சல் 100-வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி

இந்தப் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கும் 'மெர்சல்' படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தளபதி ரசிகர்கள் எங்களுக்கு ஒரு நினைவுகூரத்தக்க படமாக மெர்சலை உருவாக்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் திரையில்

மீண்டும் திரையில்

சென்னையில் உள்ள அபிராமி மாலில் மெர்சல் படம் தினமும் ஒரு ஷோ திரையிடப்பட்டு வருகிறது. மெர்சல் 100-வது நாளை பிரம்மாண்டமாக கொண்டாட பிரபல திரையரங்கான ரோஹினி தியேட்டர் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். 'மெர்சல்' படத்தை மீண்டும் இன்று திரையிடுகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

'மெர்சல்' திரைப்படம் பொங்கல் அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் மெர்சல் நூறாவது நாள் ஸ்பெஷலாக தியேட்டர்களில் திரையிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X