ஒரு நாள் தள்ளிப்போகிறது 'மெர்சல்'... எங்கே?
Recommended Video

சென்னை : அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் 'மெர்சல்' படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே 'மெர்சல்' படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் போர்ட் தான் உள்ளது. இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது படத்தின் சென்சார் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், படத்தில் இரண்டு காட்சிகளை கட் செய்துள்ளார்களாம்.

கட் ஆன காட்சி
'மெர்சல்' படத்தில் கட் ஆன இரண்டு காட்சிகள் என்ன என்று தெரியவில்லை, இது விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம் என்றாலும் படம் வந்தாலே போதும் என்கிறது மற்றொரு தரப்பு.

பிற மொழிகளில்
தற்போது அத்தனை பிரச்னைகளையும் கடந்து 'மெர்சல்' தீபாவளி அன்று அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மெர்சல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது, ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

ஒரு நாள் லேட்டு
ஆனால், தமிழில்தான் அக்டோபர் 18-ம் தேதி மெர்சல் படம் வெளிவருகிறது. தெலுங்கில் இப்படம் ஒரு நாள் தள்ளி அக்டோபர் 19-ம் தேதி வெளிவர இருக்கிறது.

மெர்சல் தீபாவளி
உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளியை மெர்சல் படத்தோடு மெர்சலாக கொண்டாட ஆவலாக இருக்கிறார்கள். டிக்கெட் புக்கிங்கிலும் பல சாதனைகளைப் புரிந்திருக்கும் 'மெர்சல்' பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications