twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் பரிசுகள் : விஷாலுக்கு வருமான வரி, விஜய்க்கு வரி ஏய்ப்பு, ரஜினிக்கு?

    By Shankar
    |

    சென்னை : மெர்சல் திரைப்பட சர்ச்சையை தொடர்ந்து, விஷாலுக்கு வருமான வரி சோதனையும், விஜய்க்கு வரி ஏய்ப்பு முத்திரையும் கிடைத்துள்ள நிலையில் ரஜினிக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மெர்சல் படத்தில் மருத்துவத் துறை, ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் என மத்திய அரசுக்கு எதிரான பல கருத்துகள் இடம்பெற்றுள்ளதால், மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்தார்கள். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். ராகுல் காந்தி தலையீட்டால் இது தேசியப் பிரச்சனையாகவும் வெடித்தது.

    Mersal gifts to Vishal, Vijay, Rajini

    மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளன. குழுவினருக்கு வாழ்த்துகள் என்று ரஜினி ட்விட் செய்த பிறகு பிரச்சனை அடங்கியது.

    முன்னதாக, திருட்டு விடியோவில் மெர்சல் பார்ததார் ஹெச்.ராஜா என்று விஷால் கடுமையாக சாடியிருந்தார். அவருடைய வீட்டிற்கு வருமான வரி சோதனையிட அதிகாரிகள் வந்தார்கள். ஜிஎஸ்டி அதிகாரிகள் என்று முதலில் கூறப்பட்டாலும், வந்தது வருமான வரி அதிகாரிகளே. என்ன பிடிபட்டது என்ற தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

    நேற்று, புலி படத்தின் போது விஜய் 5 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தார் என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். எப்போதோ சோதனை நடைபெற்று, அதற்குரிய கூடுதல் வரியும் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதைப் பற்றி தகவல் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதாவது, ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் பற்றி பேச, வருமான வரி ஏய்ப்பு செய்த ஒருவருக்கு அருகதை இல்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இந்த தகவல் மீண்டும் வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

    பாஜகவின் மிக முக்கியமான ஆயுதமே ' கேரக்டர் அசசினேஷன்', அதாவது ஒருவருடைய கேரக்டரை டேமேஜ் செய்து, அவரை நிலைகுலையச் செய்வது. ராகுல் காந்தியை ஒன்னும் தெரியாத குழந்தை என்பது போல் 'பப்பு' என்ற வசைச்சொல்லை வைத்து அழைத்து டேமேஜ் செய்தனர். அதிலிருந்து தற்போதுதான் ராகுல் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

    விஜய்யை வருமான வரி ஏய்ப்பு செய்தவர், பொது மக்கள் நலன் பற்றி பேசத் தகுதியற்றவர் என்று இப்போது பரப்புரை செய்யப்படுகிறது. விஷால் வழிக்கு வந்து விட்டால், வருமான வரி சோதனை சம்பிரதாயமானது என்று சொல்வார்கள். அல்லது வழிக்கு வரும் வரையிலும் தொந்தரவு தொடரும்.

    மெர்சல் பிரச்சனையில் உச்சபட்ச கருத்தாக, 'முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளது' என்று சொல்லி படத்தை ஆதரித்த ரஜினிக்கு பாஜகவின் பரிசு என்னவாக இருக்கும்?

    English summary
    What will be the 'gift' from BJP to Rajinikanth who supports Mersal movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X