சட்டுபுட்டுன்னு மெர்சலை இந்தி, குஜராத்தியில் டப் பண்ணுங்க... ப்ரோமோஷனை ராகுல் பாத்துப்பார்!

By Shankar

சென்னை : ராகுல் காந்தியின் ட்வீட் மூலம் அகில இந்தியப் பிரச்சனை ஆகி விட்ட மெர்சல் படத்தை இந்தியிலும், குஜராத்தி மொழியிலும் டப் செய்தால், பெரும் வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டும். தேதி குறித்து இன்னும் இழுபறி நிலவுகிறது. மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டதற்காக, தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி தள்ளிப்போடும் முடிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Mersal in Hindi and Gujarati

ஆனாலும் அங்கே ராகுல் காந்தி சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் பற்றி வெளுத்து வாங்குகிறார். மக்கள் ஆதரவும் பெருகியுள்ளது. மோடி பங்கேற்ற கூட்டத்தில், அவர் பேசும் போதே மக்கள் வெளியேறிய செய்தியும் வந்தது.

தெற்கே ஒரு தமிழ்ப் படத்திற்கு, உள்ளூர் பாஜகவினரின் அடாவடித்தனத்தை அறிந்த ராகுல் காந்தி, அது ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் சம்மந்தப்பட்டது என்று தெரிந்தவுடன், தேசியப் பிரச்சனை ஆக்கி விட்டார். கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்கும் பாஜக, ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் என ஒரே கல்லில் பல மாங்காய் அடித்துள்ளார் ராகுல் காந்தி.

வட இந்திய ஊடகங்களின் விவாத அரங்கங்களில் மெர்சல் பட விவகாரம் முக்கிய இடம் பெற்று வருகிறது. விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் விஸ்வரூபம் படப் பிரச்சனை பற்றியும் பேசுங்கள் என்று பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கின்றனர்.

குஜராத் தேர்தல் பிரதமர் மோடிக்கு ஆசிட் டெஸ்ட் என்பதால், ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் தொடர்பான அனைத்து எதிர்க்கருத்துகளுக்கும் காங்கிரஸ் முன்னுரிமை அளித்து பிரச்சாரத்திற்கு பயன் படுத்துகிறது.

இந் நிலையில், மெர்சல் படத்தை இந்தியிலும், குஜராத்தி மொழியிலும் டப் செய்து வெளியிட்டால், நிச்சயம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என நம்பலாம். ஏன், காங்கிரஸ் கட்சியே மறைமுகமாக மெர்சலை ப்ரோமோட் செய்யக்கூடும்.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் இந்தி டப்பிங் உரிமை நல்ல விலைக்குப் போயிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X