twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெர்சல் ஒரு லாஜிக்கே இல்லாத பக்கா மசாலா படம்: சொல்வது யாருன்னு நீங்களே பாருங்க

    By Siva
    |

    சென்னை: மெர்சல் ஒரு லாஜிக்கே இல்லாத பக்கா மசாலா படம் என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

    அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் படம் ரூ. 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராமல் இலவசமாக கிடைத்த விளம்பரம் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளது.

    இந்நிலையில் மெர்சல் படம் பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ் அது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    மகள்

    மகள்

    ஒரு வழியாக மெர்சல் பார்த்தேன். சரண்யாவுடன். தனது குரலை பெரிய திரையில் கேட்க ஆவலாக இருந்தார். படங்களில் நல்ல பாடல்கள் பாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பாட்டு பாடுவதை விட ஒரு பாடகிக்கு பெரிய மகிழ்ச்சி இருக்காது. அது எனக்கு புரிகிறது.

    லாஜிக்

    லாஜிக்

    மெர்சல் படத்திற்கு வருவோம். லாஜிக்கே இல்லாத ஒரு மசாலா படம். பல பிளாக்பஸ்டர்கள் இப்படித் தான். எனக்கு படம் பிடித்திருந்தது...மருத்துவ துறை வியாபாரமாக்கப்படுவது குறித்து சில நல்ல கேள்விகளை மெர்சல் கேட்டுள்ளது.

    மருத்துவம்

    மருத்துவம்

    அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. அப்படி இருக்கும்போது ஒரு துறையை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரி அல்ல. நாம் மருத்துவர்கள் புனிதர்கள் மற்றும் மனிதர்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு மருத்துவரின் மனைவிக்கு வைரம் மீது ஆசையிருக்கக் கூடாது என்று நினைப்பது போன்று.

    வைரம்

    வைரம்

    சினிமா இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பாடகி உள்ளிட்டோரின் மனைவிமார்கள் மட்டும் வைரத்தை விரும்பலாம், வெளிநாட்டிற்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.

    மனசாட்சி

    மனசாட்சி

    நாங்கள் வரி செலுத்துகிறோம் என்று பணக்காரர்கள் கூறுகிறார்கள். அவர்கள் எந்த துறையை சேர்ந்திருந்தாலும் அவர்கள் சொகுசு கார்கள், சொகுசு வீடுகள் என்று இருக்கலாம். வரி செலுத்துவதால் அவர்களின் மனசாட்சி சுத்தம்.

    இளைஞர்கள்

    நாம் வரி செலுத்துவதால் நம்(என்னை பற்றியும் தான் பேசுகிறேன்) மனசாட்சியும் சுத்தமா? நம் இளைஞர்களால் இந்த நாடு குறித்து நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்களில் பலர் மக்களை நிறத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது இல்லை. ஊழலை ஏற்றுக் கொள்வது இல்லை. நாடும், மாநிலமும் வழிநடத்த நல்ல இளைஞர்களை கண்டுகொள்ளும் என்று நம்புகிறேன்.

    English summary
    Singer Srinivas watched Mersal movie with his daughter Sharanya. He took to facebook to say that Mersal is a typical,in the face,masala movie where logic is thrown out of the window.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X