மெர்சல் விவகாரம்: ட்விட்டரில் பாஜகவை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட குஷ்பு #Mersal
Recommended Video

சென்னை: மெர்சல் விவகாரத்தில் பாஜகவை நறுக்கு நறுக்கு என்று கேள்வி கேட்டுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனங்களை நீக்குமாறு பாஜக கெடு விதித்தது. முதலில் அந்த காட்சிகளை நீக்க சம்மதித்த தயாரிப்பு நிறுவனம் பின்னர் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
படம்
சென்சார் சான்று வாங்கி, சட்டப்படி வெளியிடப்பட்ட படத்தை கேள்வி கேட்க எந்த கட்சி அல்லது தனி நபருக்கு உரிமை இல்லை. #BJPfails #MERSAL 👍🏼
காங்கிரஸ்
காங்கிரஸ், பாஜக பற்றியது அல்லது மெர்சல். இது சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகம் பற்றியது. பாஜக ஜனநாயகத்தை கொல்கிறது...அவர்களின் வழி இல்லை என்றால் வழியே இல்லை..
விமர்சனம்
பாஜகவால் விமர்சனத்தை ஏற்க முடியாது...பூங்கொத்தை சிரித்தபடி வாங்கினால் விமர்சனங்களையும் சிரித்தபடி ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்..சுதந்திரத்தை பறிப்பது வெட்கக்கேடு..
ரசிகர்கள்
மெர்சல் விவகாரம் தொடர்பாக பாஜகவை குஷ்பு விளாசுவதை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











