ஜோசப் 'மெர்சல்' விஜய் விவகாரம்: குஷ்புவின் இந்த கேள்விக்கு ராஜா பதில் சொல்வாரா?
சென்னை: விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் ஹெச். ராஜாவுக்கு எப்படி கிடைத்தது என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவரின் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.
இந்நிலையில் இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
டிராமா
நெல்லையில் தீக்குளித்த ஏழைக் குடும்பம் பற்றி பாஜகவில் ஒருவர் கூட பேசவில்லை.. பேசினீர்களா? மெர்சலுக்கு மட்டும் தான் வாய்ஸ் கொடுத்து டிராமாவா?
ஐடி கார்டு
விஜய் ஐடி கார்டு உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று ஹெச். ராஜாவை கேட்க விரும்புகிறேன்..அதிகாரத்தில் இருப்பதால் பாஜகவால் அடுத்தவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவது எளிதா?
சேல்ஸ்
கரெட்காட கேட்டீங்க மேடம். என்ன தான் நெனச்சுட்டு இருக்காங்க அவங்க அப்படியே இந்தியாவை சேல்ஸ் பண்ணிடுவாங்க போல என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
ராஜா
சரியாக கேட்டீங்க. ஹரிஹரன் ராஜா சர்மா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











