'மெர்சல்' முக்கியக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்

By Vignesh Selvaraj

சென்னை : 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கியமான மேஜிக் காட்சியின் மேக்கிங் வீடியோவை தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

'மெர்சல்' படத்தில் மேஜிக் கலைஞராக வரும் வெற்றி, தனது தாய் நித்யா மேனனின் மரணத்திற்குக் காரணமாக இருந்த டாக்டரை பாரீஸ் நகரத்தில் ஒரு மேஜிக் ஷோவில் வைத்துக் கொல்லும் காட்சி பிரமாண்டமாகக் காட்சிப் படுத்தப்பட்டு படத்தில் இடம்பெற்றது.

'மெர்சல்' திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

மேக்கிங் வீடியோ

மேஜிக் ஷோவில் சிலபல மேஜிக் வித்தைகளைச் செய்வார் மேஜிக் கலைஞர் விஜய். பிறகு, முன்பே திட்டமிட்டபடி அந்த வில்லன் டாக்டரை யதார்த்தமாக மேடைக்கு வரவைப்பது போல் செய்து ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், மேஜிக் செய்வதைப் போலவே அவரைக் கொல்வார் விஜய்.

 முக்கியக் காட்சி

முக்கியக் காட்சி

வில்லனை பெட்டிக்குள் படுக்க வைத்து போட்டுத்தள்ளும் காட்சியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினார்கள். படத்தின் முக்கிய வசனமான 'நீ விதைத்த வினையொன்று உன்னை அறுக்கக் காத்திருக்கும்' எனும் வசனமும் அந்தக் காட்சியில்தான் இடம்பெறும். பார்வையாளர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடக்கும் மேஜிக் ஷோ என்பதால் கூட்டத்தையும் காட்சிக்கேற்றவாறு கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.

 ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இயக்குநர் அட்லீ மேற்பார்வையில் இந்தக் காட்சி உருவாகியிருக்கிறது. ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோவை தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமா ருக்மணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த மேக்கிங் வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

எப்போ ரிலீஸ்?

மேடம், அப்படியே அந்த குறைக்கப்பட்ட காட்சிகள், முக்கியமாக அந்த விலங்குகள் வரும் காட்சிகளின் மேக்கிங் வீடியோக்களை எல்லாம் எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க?

இதையும் பண்ணனும் ஆங்..

இந்த மாதிரி எல்லா மேக்கிங் வீடியோக்களையும் ரிலீஸ் பண்ணுங்க மேடம்... குறிப்பா விஜய் அண்ணா டூப் இல்லாம பண்ணுன சண்டைக் காட்சிகள், மேஜிக் காட்சிகள் எல்லாம் நாங்க பார்க்கணும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X