twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மெர்சல்' பாத்த நீங்க இந்த மேக்கிங் பாத்தீங்களா..? - தேனாண்டாள் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ வெளியீடு

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து நேற்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

    'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.

    'மெர்சல்' படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து கடடி வருகிறார். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் மேஜிக் காட்சியின் மேக்கிங் வீடியோ கடந்த வாரம் வெளியானது.

     மெர்சல் மேக்கிங்

    மெர்சல் மேக்கிங்

    இந்நிலையில், 'மெர்சல்' படத்திற்காக, படக்குழுவினரால் அதிக உழைப்பில் உருவாக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் புகைப்படங்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. #MersalInMaking

     ரோஸ்மில்க் சீன்

    ரோஸ்மில்க் சீன்

    'மெர்சல்' படத்தில் இடம்பெறும் ரோஸ்மில்க் காட்சி சமூக வலைதளங்களில் பிரபலம். அதை வைத்து இப்போதும் மீம்ஸ் தெறிக்கிறது. சமந்தா விஜய்யை, 'டேய்... தம்பி' எனக் கூப்பிடும் காட்சியில் ஸ்டைலாக திரும்புவார் விஜய். அந்தக் காட்சி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

     தளபதி விஜய்

    தளபதி விஜய்

    'தளபதி' விஜய் பஞ்சாப்பில் குஸ்தி சண்டையில் ஈடுபடுவார். பயில்வான் போல இருக்கும் பஞ்சாபிக் காரர்களைப் புரட்டியெடுப்பார் மதுரைக்காரத் தளபதி. இந்தக் காட்சியிக்குப் பிறகுதான் விஜய்யின் முதல் குழந்தையைப் பெற்றெடுப்பார் நித்யா மேனன்.

     மேஜிக் காட்சி

    மேஜிக் காட்சி

    ஐரோப்பாவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சி 'மெர்சல்' படத்தின் மிக முக்கியமான காட்சி. மேஜிக் நிகழ்வின்போது ஒரு தீய டாக்டரை லைவ்வாக கொன்றுவிட்டு எஸ்கேப் ஆவார் வெற்றி. இந்தக் காட்சி பிரமாண்ட அரங்கில் பலர் முன்னிலையில் படமாக்கப்பட்டது.

     வெற்றி ஸ்டைல்

    வெற்றி ஸ்டைல்

    மேஜிக் கலைஞர் வெற்றிக்கு ஒரு உருண்டையை கை விரல்களின் வழியே சுற்றும் மேனரிசம் பழக்கப் பட்டிருக்கும். மேஜிக் கலைஞர் எனும் தோற்றத்திற்காக இதைப் பயன்படுத்தி இருப்பார்கள். இந்தக் காட்சி எடுக்குறது கஷ்டம்தான்.

     கெத்து தளபதி

    கெத்து தளபதி

    அஞ்சு ரூபாய் டாக்டருக்கு பாராட்டு விழா நடைபெறும்போது, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் செல்வார் விஜய். அப்போது அவர் ஒரு பக்கம் திரும்பி கை கூப்பும் ஸ்டைலுக்கு விஜய் ரசிகர்கள் சில்லறைகளைச் சிதற விட்டார்கள். டீசர் வெளிவந்தபோதே இந்த புகைப்படம் வைரலாகி விட்டது.

     ஆளப்போறான் தமிழன்

    ஆளப்போறான் தமிழன்

    சுள்ளேன அடிக்கும் வெயிலில், தளபதி விஜய் மத்தளத்தை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடும் காட்சியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது. படத்தில் ஒரு சில இடங்களில் அட்லீ அண்ட் டீமின் அபார உழைப்பு தெரியும்.

    English summary
    Vijay's 'Mersal' is running successfully across the world. Making pictures of high-performance shots by the crew for Mersal are posted on the official Twitter page of Sri Thenandal Films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X