மெர்சல் மிரட்டுதா?...மிரளும் தேசம்...அடங்க மறு: சமுத்திரக்கனி #Mersal
சென்னை: மெர்சல் மிரட்டுதா? மிரளும் தேசம் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி.
மெர்சல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தினர்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவோ விஜய் வெறும் விஜய் அல்ல ஜோசப் விஜய் என்று கூறி அவரின் வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டார்.
இந்நிலையில் மெர்சல் குறித்து இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மெர்சல்...மிரட்டுதா....? மிரளும் தேசம்...மீட்போம் உரிமையை....காப்போம் தமிழனை...., அடங்க மறு,,,, என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications