இந்த ஏரியாவில் இன்னும் மெர்சல் ரிலீஸாகவில்லை..- என்ன பிரச்னை?

By Vignesh Selvaraj

ஐதராபாத் : கடந்த செவ்வாய்க்கிழமை வரை மெர்சல் படம் வெளியாகுமா என்ற சந்தேகமான நிலை இருந்தது. பின் விலங்குகள் நல வாரியத்தின் NOC சான்றிதழ் வெளியானதும் படம் வெளியாவது உறுதியானது.

ஆனால் மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி'க்கு இப்பிரச்சனை இன்னும் தீரவில்லையாம். தெலுங்கிலும் இதேபோன்ற பிரச்னை என்பதால் சிறிது கால தாமதமாகியுள்ளது. அதனால் இன்று வருவதாக இருந்த மெர்சல் வெளியிடப்படவில்லையாம்.

மேலும் அதிரிந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்தவராம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் முறையான அறிவிப்புகள் ஏதும் படக்குழுவால் வெளியிடப்படவில்லை.

அதிரிந்தி

அதிரிந்தி

விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து நேற்று தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படம் இன்று தெலுங்கில் வெளியாவதாக இருந்தது. 'அதிரிந்தி' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 சென்சார் பிரச்னை

சென்சார் பிரச்னை

கடைசி நேர சென்சார் பிரச்னையால் தமிழ்ப்படமே நேற்று குறிப்பிட்டபடி வெளிவருமோ வராதோ என்ற சூழ்நிலையே செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. அதனால், தமிழ் 'மெர்சல்' பிரச்னையை மட்டும் அவசரமாகத் தீர்த்து முடித்தார்கள். தெலுங்கிலும் அதே சென்சார் பிரச்னை இருந்ததால் தமிழில் நீக்கப்பட்ட சில காட்சிகளை தெலுங்கில் நீக்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

 வெளியாகவில்லை

வெளியாகவில்லை

அதனால், படம் திட்டமிட்டபடி இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகவில்லை. அங்கு அடுத்த வாரம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 கர்நாடகாவில் காட்சிகள் நிறுத்தம்

கர்நாடகாவில் காட்சிகள் நிறுத்தம்

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தற்போது 'மெர்சல்' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நேற்று கன்னட அமைப்பினர் பிரச்னை செய்ததால் விஜய் ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு 'மெர்சல்' காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 வசூல் பாதிப்பு

வசூல் பாதிப்பு

ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று வெளியாகாததால் முதல் சில நாட்களுக்கு 'மெர்சல்' படத்தின் மொத்த வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பிர்ச்னைகள் தீர்ந்து எப்போது படம் வெளியாகும் என அறிய தெலுங்கு விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X