மெர்சல்- பார்க்கிற மாதிரி இருக்கு.. பார்த்த மாதிரியும் இருக்கு!

By Shankar

இத்தனை வருஷ தமிழ் சினிமா எத்தனையோ பரிணாம வளர்ச்சிகள அடைஞ்சிருக்கு. ஆனா என்ன வளர்ச்சி அடைஞ்சாலும் மாறாம இருக்கிறது இந்த மாஸ் ஹீரோக்களோட பழி வாங்குற கதைகள். இந்தக் கதைக்கான டெம்ப்ளேட் ரொம்ப சிம்பிள். மூணு அல்லது நாலு வில்லன்கள். பெரும்பாலும் கவர்மெண்ட் ஆஃபீசர்களா இருப்பாங்க. ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் மற்றும் இதுல ஒரு அரசியல்வாதியையும் சேர்த்துக்கொள்ளுதல் உசிதம். முதல் பாதி முழுக்க ஹீரோ போலீஸூக்கு தண்ணி காட்டி ஒவ்வொருத்தரா கடத்திக் கொல்லுவாறு. இந்த கேப்புல ஒரு நல்ல புள்ளையா பாத்து லவ்வுவாறு. ரெண்டாவது பாதிலயோ இல்ல இண்டர்வல்லயோ ஹீரோயினுக்கு இவன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்ச உடனே "ச்சீ...ரேஸ்கல்.. நீ ஒரு கொலைகாரனா"ன்னு காரித் துப்பிட்டு விலகிப் போகும்போது, ஹீரோ கூடவே சுத்துற ஒரு அள்ளக்கை அந்தப் புள்ளைய நிறுத்தி "அவன் ஏன் அவனுங்களயெல்லாம் கொல்றான் தெரியுமாம்மா?"ன்னு ஆரம்பிச்சி வலுக்கட்டாயமா அந்த புள்ளைக்கிட்ட ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக்க சொல்லுவானுங்க.

ஃப்ளாஷ்பேக்குல ஹீரோவுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்துருப்பாங்க. ஃப்ளாஷ் பேக் முடிஞ்ச உடனே கொல்றதுக்கு இன்னும் ஒரே ஒருத்தன் மட்டும் பாக்கியிருப்பான். அது யாருன்னு பாத்தா ஹீரோயினோட அப்பாவா இருக்கும். பத்து நிமிஷ ஃப்ளாஷ்பேக்க கேட்டுட்டு இத்தனை வருஷம் வளர்த்த அப்பாவ கொல்றதுக்கு, "நா உதவி பன்றேன்"னு வாய் கூசாம சொல்லும். அத்தோட விட மாட்டாங்க. அந்த இடத்துல கட் பண்ணி ஒரு குத்து சாங்க போட்டு விடுவாங்க.

Mersal Readers Review

இதான் காலங் காலமா பாக்குற நமக்கு சலிச்சிப் போனாலும் எடுக்குற அவங்களுக்கு சலிக்காம எடுத்து நமக்கு போட்டுக்காட்டுற பழிவாங்குற கதைகள்.

மெர்சல் படம்தான் இப்போது தமிழ்நாட்டின் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது. மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு சிலர் முதல் பாதில கொல்லப்பட, அவங்க ஏன் கொல்லப்பட்டாங்கங்குறதுக்கான காரணத்த விளக்குறதுதான் ரெண்டாவது பாதி.

டாக்டர் மாறனா நடிச்சிருக்க விஜய்யோட கெட்டபும், உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் சூப்பர். இந்த மாதிரி அமைதியான, அலட்டல் இல்லாத விஜய்யப் பாத்தே ரொம்ப நாளாச்சி.

வேஷ்டி சட்டையோட ஏர்போர்ட்டுக்குள்ள நுழையும்போது கெத்தா இருக்காரு. கூடவே வைகைப் புயல் வடிவேலு. காமெடி பிரிச்சு மேயப் போறாங்கன்னு எதிர்பாத்தா, காமெடிங்குறதுக்கான அறிகுறியே படத்துல தென்படல. மேஜிஷியனா வர்ற விஜய் மேஜிஷியனா இல்ல மந்திரவாதியான்னு குழப்பமா இருக்கு. உதாரணம் அந்த சூலாயுத சண்டை.

முதல் பாதி முழுக்க ரொம்ப அழகாவும், சுவாரஸ்யமாவும் போகுது. ரெண்டாவது பாதி ஆரம்பிச்ச உடனே நம்ம ஆளப்போற தமிழன் உள்ள வர்றாரு. சுவாரஸ்யம் இல்லாம ஏனோதானோன்னு கதை நகருது. வில்லனால அவரும் அவரோட மனைவியும் கொல்லப்பட அந்த நீ......ண்ட ஃப்ளாஷ்பேக் முடியுது.

மத்த பழிவாங்குற படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ரெண்டு மிகப்பெரிய வித்தியாசத்த இயக்குநர் அட்லி உருவாக்கிருக்காரு. என்னன்னா வழக்கமா மூணு வில்லன்கள் இருப்பாங்க. ஆனா இந்தப் படத்துல ரெண்டுதான். அடுத்து ஃப்ளாஷ்பேக் முடிஞ்ச உடனே வர்ற குத்துப்பாட்டு இந்தப் படத்துல இல்லை.

மூணு ஹீரோயின்கள்லயும் நித்யா மேன்ன் மட்டும்தான் கொஞ்ச நேரம் ஸ்க்ரீன்ல வராங்க. ஆனா அவங்கள ஏன் பஞ்சாபியா காமிச்சாங்க, ஏன் விஜய் பஞ்சாப்லருந்து ஆளப்போறான் தமிழன்னு பாடுனாருங்குற கேள்வியெல்லாம் நிறைய இருக்கு. காஜலும், சமந்தாவும் மின்னல் மாதிரி வந்துட்டு போயிடுறாங்க. பிரதர், சிஸ்டர்னு சொல்லிட்டு அப்புறம் அவங்கள லவ் பன்ன வைக்கிற சீக்குவன்ஸ அட்லி விடமாட்டார் போல.

எஸ்.ஜே.சூர்யா அவரோட கேரக்டர அசால்ட்டா பண்ணிருக்காரு. வழக்கமான வில்லன். பெரிய அளவுல ஸ்பெஷலா சொல்றதுக்கு எதுவும் இல்லை.

சமூகக் கருத்துக்கள மசாலா கலந்து ஜனரஞ்சகமா சொல்றது ஷங்கரோட பாணி. அதே பாணிய அவரோட சிஷ்யன் அட்லியும் ஃபாலோ பன்னிருக்காரு.. பாணிய மட்டும் ஃபாலோ பண்ணா பரவால்ல. காட்சிகளையுமா அப்படியே ஃபாலோ பண்ணனும்?

படம் பார்க்கிற மாதிரிதான் இருக்கு. ஆனா ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. அடுத்தடுத்து வரப்போற காட்சிகளையும் ரொம்ப ஈஸியா யூகிக்க முடியுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X