twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாணியம்பாடி தியேட்டரில் மெர்சல் படத்தை பாதியில் நிறுத்திய துணை கலெக்டர்: எதற்கு தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    தியேட்டரில் மெர்சல் படத்தை பாதியில் நிறுத்திய துணை கலெக்டர்- வீடியோ

    வேலூர்: வாணியம்பாடியில் மெர்சல் படம் துணை கலெக்டரால் பாதியில் நிறுத்தப்பட்டது.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் நேற்று காலை மெர்சல் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுமார் 60 பேர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீர் என்று படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    டெங்கு

    டெங்கு

    படத்தை நிறுத்திவிட்டு விளக்குகள் ஆன் செய்யப்பட்டது. அப்போது துணை கலெக்டர் ஜெயபிரகாஷ் அங்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு சில நிமிடங்கள் டெங்கு பற்றி பேசினார்.

    அபராதம்

    அபராதம்

    புதன்கிழமை தியேட்டரை பரிசோதனை செய்யவந்தபோது கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இருந்ததை பார்த்து தியேட்டர் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தேன். இன்று மீண்டும் பரிசோதனை செய்ய வந்தேன் என்று ஜெயபிரகாஷ் பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

    நிலவேம்பு

    நிலவேம்பு

    டெங்கு வராமல் தடுப்பது எப்படி என்று ஜெயபிரகாஷ் பார்வையாளர்களிடம் விளக்கினார். இதையடுத்து படம் பார்க்க வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது.

    கேள்விகள்

    கேள்விகள்

    படத்தை பாதியில் நிறுத்தியதால் பார்வையாளர்கள் கடுப்பாகாமல் ஜெயபிரகாஷிடம் டெங்கு குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். இதனால் ஜெயபிரகாஷ் மகிழ்ச்சி அடைந்தார்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    படம் சுமார் 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. துணை கலெக்டர் பேசி, நிலவேம்பு குடிநீர் அளித்த பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதன் பிறகு படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.

    English summary
    Vellore deputy collector Jayaprakash intervened Mersal show to distribute Nilavembu neer and to create awareness about dengue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X