நாளை வெளியாகும் ஆளப்போறான் தமிழன் பாடல்: 'மெர்சல்' அறிவிப்பு
சென்னை: மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஹ்மான் இசையில் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது.
இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரஹ்மான் இசையில் ஆளப்போறான் தமிழன் சிங்கிள் நாளை ரிலீஸாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications