இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக... இரண்டு முறை ஒளிபரப்பான 'மெர்சல்' பாடல்!

By Vignesh Selvaraj

Recommended Video

தொலைக்காட்சியில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது.

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்தது.

மெர்சல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் மெர்சல் படத்தை பொங்கல் அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பினர். அப்போது, 'ஆளப்போறான் தமிழன்' பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது.

மெர்சல்

மெர்சல்

'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கி விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தினர்.

நூறாவது நாள்

நூறாவது நாள்

மெர்சல் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஆக இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் மெர்சல் படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று பொங்கலுக்கு ஒளிப்பரப்பியது.

ஒன்ஸ்மோர்

ஒன்ஸ்மோர்

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ஆர்வமாக பார்க்க, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏதோ திரையரங்கு போல் ஆளப்போறான் தமிழன் பாடலை இரண்டு முறை தொலைக்காட்சியிலேயே ஒளிப்பரப்பினர்.

முதல் முறையாக

இதுவரை இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லையாம். விளம்பர இடைவேளைக்கு முன்பு ஒளிபரப்பான பாடல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தாலும், திட்டமிட்டு ஒளிபரப்பப்பட்டது இப்போதுதான். மேலும், இப்படம் ஒளிபரப்பாகும்போது தொலைக்காட்சியின் டி.ஆர்.பி என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X