அட்லீ கண்ணில் மண்ணைத் தூவி இன்டர்நெட்டில் கசிந்த மெர்சல் பாடல் வீடியோ
சென்னை: விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் பாடலை படமாக்கியபோது யாரோ திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸர் வெளியான சில மணிநேரத்திலேயே அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் படப்பிடிப்பில் விஜய் நடனமாடியபோது அதை யாரோ திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் விஜய் அசத்தலாக ஆடியுள்ளார்.
விஜய்க்கு டான்ஸ் ஆட சொல்லியாத் தர வேண்டும். படக் காட்சிகள் எதுவும் கசிந்துவிடாமல் இருக்க அட்லீ நடவடிக்கை எடுத்தும் இப்படி நடந்துள்ளது.
கசிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











