'போய்ட்டு வரேன்... ஓவர் ஓவர்!' - ரசிகர்களுக்கு குட்பை சொல்லும் 'மெர்சல்' எமோஜி!
சென்னை : 'மெர்சல்' படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெர்சல் ட்விட்டர் எமோஜி விரைவில் செயலிழக்க இருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்யின் 'மெர்சல்' படம் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்போடு வெளியானது அனைவருக்கும் அறிந்ததே. படம் வெளியாவதற்கு முன்பே பயங்கரமான ப்ரொமோஷன் முயற்சிகளும் செய்யப்பட்டன.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர். அதில் ஒன்றுதான் இந்த ட்விட்டர் எமோஜி. 'மெர்சல்' அல்லது மெர்சல் தொடர்பான ஹேஸ்டேக்குகளுக்கு விஜய்யின் படம் வந்துவிடும்.
ட்விட்டரில் சர்ப்ரைஸ்
ட்விட்டர் சமூக வலைதளம் 'மெர்சல்' படத்திற்கு புதிதாக எமோஜியை அறிமுகப்படுத்தியது. 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் விஜய்யின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த எமோஜி ட்விட்டர் தளத்தால் அதிகாரப்பூர்வமாக லைவ் செய்யப்பட்டது. இந்த எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இதனை ரசிகர்களும் மிகவும் கொண்டாடினர்.

கபாலிக்குக் கிடைக்காத பெருமை
ஏற்கெனவே, 'கபாலி' படத்திற்கு எமோஜி வெளியிட முயற்சிசெய்யப்பட்டது. ஆனால், அப்படத்திற்குக் கிடைக்கவில்லை. விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதமாக 'மெர்சல்' எமோஜி வெளியிட்டது. தமிழ் சினிமாவின் முதல் எமோஜி எனும் பெருமையும் மெர்சலுக்குக் கிடைத்தது. எமோஜி வெளியிடப்பட்டது முதல் ரசிகர்கள் அந்த எமோஜியைக் குறிப்பிட்டு ட்வீட்டுகளைத் தெறிக்கவிட்டனர்.
ரசிகர்களுக்கு ஸ்பெஷல்
'ட்விட்டர் எமோஜிகள் ரசிகர்களுக்குக் கூடுதல் வேடிக்கையாகவும், ரசிகர்கள் மெர்சல் எமோஜியை கூடுதல் ஸ்பெஷலாகவும் கருதினார்கள்.' என மெர்சல் எமோஜிக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எமோஜி அவ்ளோதான்
ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் கையாண்ட இந்த எமோஜி ஐடியா நன்கு வெற்றி பெற்றது. இந்த எமோஜிகள் இன்றோடு செயலிழந்து விடும் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரியாவிடை
தமிழ் சினிமாவுக்கு பெருமை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் திரைப்படத்திற்காக ட்விட்டர் எமோஜியாக வெளியானது மெர்சல் எமோஜி. இப்போது பிரியாவிடை பெறுவதால் சோகமாக விடை கொடுக்கவிருக்கிறார் மெர்சல் படக் குழுவினர்.
ஓவர் ஓவர்!
மெர்சல் எமோஜி : பை பை நான் போய்ட்டு வரேன் ஓவர் ஓவர்!
விஜய் ரசிகர்கள் : தளபதியின் 62-வது படத்தில் பார்ப்போம். ஓவர் ஓவர்!


Click it and Unblock the Notifications











