மெர்சல் விஷயத்தில் முடிவை மாற்றிக் கொண்ட தமிழ் ராக்கர்ஸ்
சென்னை: மெர்சல் படத்தை ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பல தடைகளை தாண்டி படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் மெர்சல் படம் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது படம் ரிலீஸான மூன்று நாட்கள் வரை இணையதளத்தில் வெளியட மாட்டோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
மெர்சல் படத்திற்கான டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
தளபதி தீபாவளியை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications