தெலுங்கிலும் புயல் கிளப்ப வருகிறது மெர்சல்... அங்கேயும் ஃப்ரீ பப்ளிசிட்டி தருமா பாஜக?
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் மெர்சல்' இந்த வாரம் தெலுங்கில் வெளியாகிறது.
அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், தமிழில் உள்ள அதே காட்சிகளுடன் எந்த மாறுதலுமின்றி வெளியாகவிருக்கிறது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகள் களம் இறங்கின. திரைத்துறையினரும் மெர்சல்' படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பேசும் படமாக மாறியுள்ள மெர்சலை இந்தி, குஜராத்தியில் டப் செய்து வெளியிட யோசனை தெரிவித்துள்ளனர் பல அரசியல் கட்சிகளும். ஆனால் இந்தி, குஜராத்தி பதிப்புகள் குறித்து இன்னும் தயாரிப்பு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
'அதிரிந்தி' வருகிற 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் இலவச விளம்பரம் தருமா பாஜக? பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











