'மெர்சல்' டிக்கெட் புக்கிங் ஆரம்பம் - தியேட்டரில் குவியும் ரசிகர்கள்
சென்னை : விஜய் நடிப்பில் 'மெர்சல்' படம் இந்த தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னையின் பிரபலமான ரோகிணி, பரிமளம் ஆகிய தியேட்டர்களில் 'மெர்சல்' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
ரோகிணி தியேட்டர் எப்போதுமே ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்காக உள்ளது. அதனால், இன்று அதிகாலையே டிக்கெட் வாங்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர்.
நீண்ட வரிசை
' 'மெர்சல்' டிக்கெட் வாங்க ரசிகர்கள் தியேட்டரின் டிக்கெட் கவுன்டர் முதல் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் வரை வரிசையில் நிற்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார் ரோகிணி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா.
போக்குவரத்து பாதிப்பு
ரசிகர்களின் கூட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, மேலும், தளபதி ரசிகர்களிடன் கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு கூட ஏற்பட்டது. அதற்கு தியேட்டர் உரிமையாளர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஆன்லைன் டிக்கெட்
ஆன்லைன் டிக்கெட் 4-5 நிமிடங்களில் விற்றுவிடும் என்பதால் ஒரே நேரத்தில் ஓப்பன் செய்தால் கவுன்டரில் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது. எனவே பொறுமையாக இருங்கள் என ட்வீட் செய்துள்ளார் ரோகினி தியேட்டர் உரிமையாளர்.
ரசிகர்கள் உற்சாகம்
கவுன்டரில் டிக்கெட் விற்பனை துவங்கியதும் டிக்கெட் வாங்கக் காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











